Nagarjuna King 100
சினிமா

நாகார்ஜுனாவின் 100வது படம் துவக்கம்... சசிகுமார் படத்தின் ரீமேக்கா? | King100 | Lottery King

நாகார்ஜுனா இப்படத்தின் பூஜையை கடந்த திங்கட்கிழமை எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தியுள்ளார்.

Johnson

வோதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா. `ரட்சகன்', `பயணம்' போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி சமீபத்தில் வெளியான `கூலி' படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது நாகார்ஜுனா தனது 100வது படத்தில் நடித்து வருகிறார்.

Ayothi

பொதுவாக இது போன்ற மைல் கல் சாதனைகளை பிரம்மாண்டமாக அறிவித்து துவங்குவது வழக்கம். ஆனால், நாகார்ஜுனாவோ இப்படத்தின் பூஜையை கடந்த திங்கட்கிழமை எந்த ஆரவாரமும் இன்றி அமைதியாக அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடத்தியுள்ளார்.

தமிழில் அஷோக் செல்வன், அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, ஷிவாதமிகா நடித்த 'நித்தம் ஒரு வானம்' படத்தை இயக்கிய ரா. கார்த்திக் தான் நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்குகிறார். நாகார்ஜுனா தனது சொந்த பேனரான 'மனம் எண்டர்பிரைசஸ்' மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் சசிகுமார் தமிழில் நடித்த `அயோத்தி' படத்தின் தழுவல் என்றும் சொல்லப்படுகிறது. தற்காலிகமாக King100 என்று அழைக்கப்படும் இந்தப் படத்திற்கு `லாட்டரி கிங்' எனப் பெயரிடப்பட உள்ளது என்று சொல்லப்படுகிறது.