மிஸ்டர் எக்ஸ் ட்ரெய்லர் Mr.X
சினிமா

துரந்தர் போன்ற படமா ’Mr.X..’ அதே ஸ்பை த்ரில்லர் கதை! மிரட்டும் ட்ரெய்லர்! இயக்குநர் சொன்ன பதில்!

ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் Mr.X திரைப்படத்தின் ட்ரெய்லர் துரந்தர் படத்தை நினைவுபடுத்துவதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Rishan Vengai

‘மிஸ்டர் எக்ஸ்’ ட்ரெய்லர், வெளிநாட்டில் ரகசிய மிஷனில் ஈடுபடும் இந்திய உளவாளிகள் குழு, நியூக்ளியர் டிவைஸ் மீட்பு, மோடி சாயலில் பிரதமர் காட்சி போன்ற அம்சங்களால் ‘துரந்தர்’ படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் இயக்குநர் மனு ஆனந்த், இது துரந்தர் அல்ல என்றும், துரந்தர் படத்திற்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

ஆர்யா நடிப்பில் மனு ஆனந்த் இயக்கியுள்ள படம் ‘மிஸ்டர் எக்ஸ்'. இதில் கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஷால் நடித்த FIR படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மனு ஆனந்த், அடுத்த படமாக துவங்கியது ‘மிஸ்டர் எக்ஸ்'. 2024லிலேயே இப்படம் நிறைவடைந்துவிட்டாலும் வெளியாகாமல் இருந்தது. இப்போது இந்தப் படம் ஏப்ரல் 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

Arya

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகள் துரந்தர் படத்தை நினைவூட்டுவதால் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

துரந்தர் போன்ற படமா மிஸ்டர் எக்ஸ்..

துரந்தர் படத்தில் ஒரே ஒரு இந்திய உளவாளி வேறு நாட்டிற்கு சென்று ஸ்பையாக செயல்படுவது போன்ற கதையம்சம் இருக்கும், அதேபோல மிஸ்டர் எக்ஸ் ட்ரெய்லரை பொறுத்தவரையில் வேறு நாட்டிற்கு இந்தியாவிலிருந்து ஒரு குழுவே உளவாளியாக செல்வது போன்ற கதை எழுதப்பட்டுள்ளது. நியூக்ளியர் டிவைஸ் ஒன்றை கண்டுபிடித்து இந்தியாவிற்கு கொண்டுவரவேண்டும் என்ற மிஸ்ஸன் உடன் ஒரு குழு வேறு நாட்டிற்கு செல்வது போல ட்ரெய்லரில் காட்சிகள் இடம்பிடித்துள்ளன. இதில் மோடி சாயலில் இந்திய பிரதமர் வருவது போன்ற காட்சியும் இடம்பிடித்துள்ளது. இதனால் தான் இது துரந்தர் போன்ற திரைப்படமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தசூழலில் இதுகுறித்து பேசியிருக்கும் மிஸ்டர் எக்ஸ் பட இயக்குநர் மனு ஆனந்த், “MrX திரைப்படத்தைப் பார்த்த பிறகு, சிலர் என்னிடம் ஒரு பான் இந்தியா திரைப்படம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டார்கள். இந்தப் படம் 1965 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் நடந்த 7 நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் ஒரு #துரந்தர் படத்தை உருவாக்கிவிட்டோம் என்று நான் கூறவில்லை. #MrX படம் துரந்தர் அல்ல. மக்கள் இதை அந்தப் படத்துடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. ஆனால், இரண்டு படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நீங்கள் படத்தைப் பார்க்கும்போது, ​​அது என்னவென்று உங்களுக்குத் தெரியும்” என்று பேசியுள்ளார்.