”என்ன எப்படி உங்களுக்கு பிடிக்குது.. உங்க ரசனை மேல எனக்கு டவுட்” - பிரதீப் ரங்கநாதன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் நடித்த ‘LIK’ ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது. புரமோஷன் சுற்றுப்பயணமாக கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப், பெண்கள் ரசிகர்களிடம் பேசும்போது, தன் வாழ்க்கையில் சந்தித்த பெண்கள் தந்த நல்ல மாற்றங்களை நினைவுகூர்ந்து, பெண்களுக்காக மட்டும் அவர்களின் வலிமையை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது கனவை பகிர்ந்தார்.
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏப்ரல் 10ஆம் தேதியான நாளை வெளியாகவிருக்கிறது.
படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக பல்வேறு புரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் பிரதீப் ரங்கநாதன், கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் பெண்களுக்காக மட்டும் கதை எழுதி படம் பண்ணவேண்டும் என கூறினார்.
என்ன எப்படி உங்களுக்கு பிடிக்கிது..
கல்லூரி நிகழ்வில் பெண்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணு கூட என்ன பார்க்கல.. ஆனா இப்போ நீங்க எல்லாம் என்ன பார்த்து சந்தோஷப் பட்டுட்டு இருக்கீங்க.. உங்க டேஸ்ட் மேல எனக்கு சந்தேகமா இருக்கு. பொண்ணுங்க நினைச்சா பொண்ணுங்க வாழ்க்கையை மட்டுமில்ல பசங்க வாழ்க்கையையும் மாத்தலாம், என் வாழ்க்கையையும் பல நல்ல பொண்ணுங்க மாத்தியிருக்காங்க.
என் வாழ்க்கைல நான் சந்திச்ச பொண்ணுங்க எல்லாமே நல்லவங்க தான். அவங்க எல்லாருமே எனக்கு நல்ல மாற்றத்த கொண்டுவந்தாங்க. உங்க எல்லாரையும் பார்க்கும்போது, பெண்களுக்காக மட்டுமே ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. பெண்களோட வலிமைய காட்டுற மாதிரி ஒரு படம் பண்ணனும்னு ஆசை, அதுல நிச்சயமா நான் ஒரு இயக்குநரா, ரைட்டரா அல்லது புரொடியூசரா இருப்பம். நிச்சயம் பெண்களுக்காக ஒரு படம் பண்ணுவன்” என்று பேசினார்.

