போர் முடிந்து நாடு திரும்பும் ஒடிசியஸின் பயணமே கதை!
கிரேக்க படை டிராய் நகரத்தில் போர் தொடுத்து வெற்றி பெறுகிறார்கள். அந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் இதாக்கா அரசர் Odysseus கொடுத்த Trojan Horse யோசனை தான். போரில் வெற்றி பெற்ற நாடு திரும்ப முடிவெடுக்கிறார்கள். ஆனால் Odysseus கப்பல் திசைமாறி போகிறது. பல ஆபத்துகளை அவரும் அவரது படை வீரர்களும் சந்திக்க துவங்குகிறார்கள். இன்னொரு பக்கம் போர் முடிந்து பல வருஷங்கள் ஆகியும் Odysseus திரும்பி வராததால் அவர் இறந்துட்டதாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இதாக்காவிலிருக்கும் Odysseus மனைவி Penelope, மகன் Telemachus, நண்பர் Eumaeus இந்த மூவர் மட்டும் தான் ஒடிசியஸ் திரும்ப வருவார் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். Odysseus இறந்துவிட்டார் என நம்பும் பலரும் அரசி Penelopeஐ திருமணம் செய்து அரியணை எற ஆசைப்படுகிறார்கள். இது அவர்களுடைய சம்பிரதாயத்தில் ஒன்று என்பதால் Penelope இதனை சகித்துக் கொள்ளும் சூழல் உருவாகிறது. Odysseus திரும்பினாரா? இதாக்காவில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தான் இந்த The Odyssey.
நோலன் படம் என்றாலே அதன் விஷுவலுக்காக பெரிதாக்க பேசப்படும். இந்தப் படத்திலும் பிரம்மாண்ட காட்சிகள் உள்ளன. ஆனால் அதை தாண்டி மனிதர்களின் தன்மையை பிரதானப்படுத்தி கதை சொல்லி இருக்கிறார் நோலன். Odysseus என்ற மனிதனின் தடுமாற்றங்களை பிரதானமாக்கி காட்சிகளின் பிரம்மாண்டத்தை குறைத்திருக்கிறார்.
Matt Damon, Tom Holland, Anne Hathaway, Robert Pattinson, Lupita Nyong'o, Samantha Morton, Zendaya, Charlize Theronனு லீட் ரோல்ல வர்ற எல்லாருமே அசத்துறாங்க. குறிப்பாக Matt Damon வெளிப்படுத்தும் குழப்பம், நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற பரிதவிப்பு, குற்ற உணர்ச்சியில் நடுங்குவது என சிறப்பான நடிப்பு. Anne Hathaway கண்களில் காட்டும் வலி, ஏக்கம், மறுமணம் பற்றி பேசும் போது வெளிப்படுத்தும் இயலாமை என பல காட்சிகளில் மிரட்டுகிறார். Hoyte van Hoytema ஒளிப்பதிவில் பல காட்சிகள் இன்னும் நம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. Ludwig Göransson பின்னணி இசையும் படத்தின் டென்ஷனை கூட்டும் காட்சிகளில் பெரிதும் உதவி இருக்கிறது.
Trojan Warல் தான் செய்த ஒரு விஷயத்தை நினைத்து Odysseus வருந்துவது, கடவுளுடைய வார்த்தைகள் எனக் கூறி, பின் அதுவே ஒற்றுமையை குலைக்கும் ஒன்றாக மாறுவது, போர் பற்றிய ஒரு படத்துக்குள்ள, போருக்கு எதிரான குரலை பதிவு செய்த விதம் போன்றவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நல்ல பதிவாக இருந்தது.
ஹோமர் எழுதிய கிரேக்க இலக்கியமான Odysseyய தான் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறார் நோலன். அந்தக் கதையை படிக்காதவர்களுக்கு கூட The Odyssey பார்க்கும் போது, இதிலிருக்கும் பல காட்சிகள் ஏற்கெனவே பல சினிமாக்களின் பயன்படுத்தி உள்ளதை புரிந்து கொள்ள முடியும். ராமாயணம் துவங்கி தக் லைஃப் வர பல விஷயங்கள் நம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
விஷுவல் ட்ரீட் எல்லாம் ஓகே தான். ஆனால் ஒரு சினிமாவாக எந்த சர்ப்ரைஸும் நமக்கு இல்லை என்பது சோகம். கதை ஒரு நான் லீனியராக பயணித்தாலும், சுலபத்தில் கணிக்க கூடியதாக தான் இருந்தது. எல்லா விஷயங்களுக்குமான முடிவை கொடுக்க கடைசி 40 நிமிடம் வரை நேரம் எடுத்துக் கொள்வதால், அதுவரை காத்திருக்கும் நமக்கும் ஆர்வம் நீர்த்து போகிறது.
மொத்தத்தில் விஷுவலாகவும், சொல்ல வந்த கருத்தாகவும் ஓகே. ஆனால் கதை, திரைக்கதையில் சுவாரஸ்யமும் புதுமையும் இருந்திருந்தால் வழக்கம் போல நோலன் ட்ரீட்டா இருந்திருக்கும்.