இவ்வாண்டு மலையாள திரைத் துறை 700 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் மட்டும் 199 மலையாள திரைப்படங்கள் வெளிவந்தன. இவற்றில் வெறும் 26 படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. மொத்தமாக, இவ்வாண்டில் மட்டும் திரைப்பட தயாரிப்புக்காக 1,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதில் வெறும் 300 கோடி மட்டுமே திரும்பி வந்துள்ளது. அந்த வகையில், தயாரிப்பாளர்கள் 700 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர் என்று கேரளா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வசூலை வாரிக் குவித்த படங்களின் பட்டியலில் மஞ்சுமெல் பாய்ஸ், ஆவேசம், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஏஆர்எம் ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கிஷ்கிந்தா காண்டம், குருவாயூர் அம்பலநடையில், வர்ஷங்களுக்கு சேஷம் ஆகிய படங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக வசூலைக் குவித்தன.