rajni - lokesh web
சினிமா

யூடியூப் டிரெண்டிங்கில் No.1.. 'ஜெயிலர் 2' அறிவிப்பு வீடியோவுக்கு லோகேஷ் கொடுத்த ரியாக்சன்!

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பு வீடியோ யூடியுப் தளத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் அசத்திவருகிறது.

Rishan Vengai

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அனிருத் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில், ரஜினியின் மாஸ் காட்சிகளுக்காக வும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் ஸ்டிராங்கான கேமியோ ரோல்களுக்காகவும் படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது.

ஜெயிலர்

கிட்டதட்ட 4 வாரங்கள் திரையங்குகளில் நன்றாகவே ஓடியது. ரஜினி ரசிகர்களை தாண்டி பலரும் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர். பாக்ஸ் ஆஃபிஸில் உலகளவில் 650 கோடிவரை வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம், இந்தியாவில் மட்டும் 400 கோடி வசூலை ஈட்டி சம்பவம் செய்தது.

ஜெயிலர்

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று வெளியானது.

பிளாஸ்டோ பிளாஸ்ட்டு.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த ரியாக்சன்!

ஜெயிலர் 2 இரண்டாம் பாகம் மீண்டும் நெல்சன் இயக்கத்தில், ரஜினி மற்றும் அனிருத் காம்போவில் களமிறங்க உள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது. நெல்சன், அனிருத் இருவரும் அடுத்த படம் குறித்து கலந்துரையாடலுடன் தொடங்கி, பின்னர் ரஜினியின் மாஸ் எண்ட்ரியுடன் முடிவடையும் ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோ ரசிகர்களை அதிகப்படியாக கவர்ந்தது.

இந்த நிலையில் ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோவானது யூடியூப் தளத்தில் 23 மணிநேரத்தில் 9.28 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து அசத்திவருகிறது.

இந்த சூழலில் ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோவை பார்த்திருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “வாவ்வ்வ்வ்வ்... தலைவர், அனிருத், நெல்சன் மூன்றுபேரும் இணைந்தால் பிளாஸ்ட்டோ பிளாஸ்ட்டு” என்று பதிவிட்டுள்ளார்.