தெறிக்கவிடும் ஆக்ஷன்.. மாஸ் காட்டும் ஜெயிலர் 2 ப்ரோமோ வீடியோ!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அனிருத் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆன நிலையில், ரஜினியின் மாஸ் காட்சிகளுக்காக மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் ஸ்டிராங்கான கேமியோ ரோல்களுக்காக படம் அதிரிபுதிரி ஹிட் அடித்தது. கிட்டதட்ட 4 வாரங்கள் திரையங்குகளில் நன்றாகவே ஓடியது. ரஜினி ரசிகர்களை தாண்டி பலரும் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.
இதனிடையே, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் ஜெயிலர் படத்தில் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை நெல்சனே தன்னுடைய பேட்டிகளில் பல முறை குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. ரஜினிகாந்த தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் பண்டிகையையொட்டி இன்று வெளியாகி உள்ளது.
ஜெயிலர் 2 படம் அறிவிப்பு..
ஜெயிலர் 2 அறிவிப்பு வீடியோவை பொறுத்தவரையில், நெல்சன் தன்னுடைய பாணியிலேயே ப்ரோமோ வீடியோ மூலம் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோவின் தொடக்கத்தில் இயக்குநர் நெல்சனும், இசையமைப்பாளர் அனிருத்தும் கோவாவில் ஜெயிலர் இரண்டாம் பாகம் கதை உரையாடலில் இருப்பது போல் இருக்கிறது.
பின்னர், திடீரென அதில் ஜெயிலர் படத்தில் ஆக்ஷன் காட்சி போல் ஒன்று நிகழ்கிறது. ரஜினி மாஸ் ஆக ஒரு ஆக்ஷன் காட்சியில் தோன்றுகிறார். பின்னர், ஆக்ஷன் காட்சி நன்றாக இருக்கிறது ஜெயிலர் இரண்டாம் பாகமே எடுத்துவிடலாம் என்று அனிருத் சொல்ல ப்ரோமோ முடிகிறது. இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கவரும்படியாக இருக்கிறது. எதிர்பார்ப்பையும் கூட வைத்துள்ளது.