சமீபத்தில் தனது காதலரை சமூக வலைத்தளம் மூலம் அறிமுகம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தார். அதன்படி, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி திருமணம் கோவாவில் நேற்று நடைபெற்றது.
கோவாவில் நேற்று நடைபெற்ற கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் காதலரை கரம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், பள்ளியில் இருந்து தனக்கு நண்பராக இருந்த ஆண்டனியைதான் கரம்பிடித்துள்ளார் கீர்த்தி. இவர்களது திருமண விழாவில், குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகின்றன.