Kalabhavan Mani daughter Sreelakshmi web
சினிமா

கலாபவன் மணியின் கனவை நிறைவேற்றிய மகள் ஸ்ரீலக்ஷ்மி! | Kalabhavan Mani | Sreelakshmi

கலாபவன் மணி தன் மகள் ஸ்ரீலக்ஷ்மியை மருத்துவராக்க வேண்டும் எனவும், ஏழை மக்களுக்கு அவர் உதவ வேண்டும் எனவும் கனவை கொண்டிருந்தார்.

Johnson

கலாபவன் மணியின் மகள் ஸ்ரீலக்ஷ்மி, தந்தையின் கனவின்படி மருத்துவராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்யும் வழியில் முன்னேறியுள்ளார். மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் இதை பகிர்ந்து, சகோதரரின் நினைவுகளை மனதில் கொண்டு அவரின் கனவுகளை நிறைவேற்றியதாக கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் கலாபவன் மணி. தனது காமெடி மற்றும் குணச்சித்திர நடிப்பால் பலரையும் கவர்ந்த அவர் மறக்க முடியாத பல பாத்திரங்களில் நடித்துள்ளார். 2016ல் இவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கலாபவன் மணி மறைந்து பத்தாண்டுகள் கழித்து அவரின் கனவு ஒன்று நிறைவேறியுள்ளதை, மணியின் சகோதரர் டாக்டர் ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் பகிர்ந்துள்ளார்.

Kalabhavan Mani

கலாபவன் மணி தன் மகள் ஸ்ரீலக்ஷ்மியை மருத்துவராக்க வேண்டும் எனவும், ஏழை மக்களுக்கு அவர் உதவ வேண்டும் எனவும் கனவை கொண்டிருந்தார். இப்போது அந்தக் கனவு நிறைவேறியுள்ளது.

இதுபற்றி  மணியின் சகோதரர் டாக்டர் ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் கூறும் போது "என் சகோதரனின் ஆசைப்படி அவள் ஒரு மருத்துவராகிவிட்டாள். அவள் மருத்துவராகி ஏழைமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை தான் அவர் விரும்பினார். இன்று அவள் எம்பிபிஎஸ் முடித்து மருத்துவராகப் பணியாற்ற போகிறாள்.

ஒரு சகோதரனாக எனக்கும் அவர் நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து வளர்த்தெடுத்தார். நான் முனைவர் பட்டம் பெற்றேன், இப்போது கலாமண்டலத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறேன். நாங்கள் எப்போதும் அவரது நினைவுகளை ஆசைகளை மனதில் வைத்திருக்கிறோம். எங்கள் மனம் நடுங்கிய தருணங்கள் இருந்தன, ஆனால் நாங்கள் எங்களை கட்டுப்படுத்திக் கொண்டு என் சகோதரர் விரும்பியபடியே முன்னேறினோம். அவரது கனவுகளின் பாதையில் நாங்கள் பயணிக்கிறோம்" என்று ஆர்.எல்.வி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.