ஜூராசிக் பார்க் திரைப்பட வரிசையில் அடுத்த பாகம் நாளை வெளியாகும் நிலையில், மீண்டும் டைனோடர்களை திரையில் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 1993ஆம் ஆண்டு வெளியாகி உலகையே அதிரவைத்த, இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ஜுராசிக் பார்க் படத்தை பலரும் மறந்திருக்க முடியாது.
இப்படத்தின் 7ஆவது பாகம் உலகெங்கும் 4ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜுராசிக் பார்க் வேர்ல்ட் ரீ பர்த் என்ற பெயரில் வெளியாகும் இப்படத்தை கேரத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ளார், டேவிட் கோப் திரைக்கதை எழுதியுள்ளார்.
1993இல் வெளியான முதல் ஜுராசிக் பார்க் படத்திற்கும் இவர்தான் கதை எழுதியிருந்தார். மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய மருத்துவ பிரச்சினைக்கு மருந்து தயாரிப்பதற்காக ஜுராசிக் பார்க்கிற்கு சென்று அங்கு வசிக்கும் மிகப்பெரிய மிக ஆபத்தான டைனோசரின் மரபணுவை சேகரிக்க நிபுணர் குழு முயற்சிக்கிறது. அப்போது எதிர்கொள்ளும் சவால்கள்தான் படத்தின் கதை. மிரள வைக்கும் ஆக்ஷன் காட்சிகள், அதிரடியான திருப்பங்கள் நிறைந்ததாக இப்படம் இருக்கும் என படக்குழு கூறியுள்ளது. ஜுராசிக் பார்க் சீரிஸ் படங்களில் இது பிளாக் பஸ்டராக அமையுமா என்று உலகெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.