ஆஸ்கர் விருது விழா - ஜான் சீனா
ஆஸ்கர் விருது விழா - ஜான் சீனா முகநூல்
சினிமா

ஆஸ்கர் விருது விழாவில் ஆடையின்றி வந்த ஜான் சீனா! ஏன்?

ஜெனிட்டா ரோஸ்லின்

இந்திய நேரப்படி இன்று காலை 4 மணிக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் டொல்பி திரையரங்கில் 96 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இயக்குநர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய Oppenheimer படமானது சிறந்த நடிகர், திரைப்படம், இயக்குநர், துணை நடிகர், இசை உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது.

ஆஸ்கர் விருதுகள்

மேலும் Poor Things திரைப்படமானது 4 பிரிவுகளின் கீழும் ஆஸ்கரை தனதாக்கி கொண்டது. இவ்விழாவினை பிரபல ஆங்கில நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார்.

அப்போது நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பாளருக்கான விருது வழங்க பேசிய அவர் ‘ஒரு ஆண் ஆடையில்லாமல் மேடையில் இப்போது ஓடினால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்’ என்றார்.

அப்போது, சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை வழங்க WWE வீரர் ஜான் சீனா ஆடைகளின்றி திரைக்கு பிறகு மறைந்து கொண்டிருந்தார்.

மேலும் இது குறித்து ஜான் சீனா கூறுகையில், ’இது ஒரு அருமையான நிகழ்ச்சி. இதில் போய் ஆடையில்லாமல் மேடையில் ஓடச் சொல்லும் ஐடியாவுக்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். ஆணின் உடம்பு ஒன்றும் ஜோக் இல்லை’ என்றார்.

அதற்கு ஜிம்மி, ‘WWE வீரர்கள் நிர்வாணமாதத்தான் சண்டை போடுவார்கள்...’ என்றார்.

அதற்கு ஜான் சீனா ‘நிர்வாணமாக இல்லை. சண்டைக்கு உரிய உடையைதான் அணிந்து சண்டை போடுவேன்..’ என்றார்.

‘அது நிர்வாணமாய் இருப்பதனை விட மோசமானது’ என்றார்.

தொடர்ந்து ஜான் சீனா, ஜிம்மின் கையில் இருந்த ஒரு சிறிய பலகையின் உதவியால் தன் அந்தரங்க பகுதியை மூடிக்கொண்டு மேடையின் நடுவில் வந்துநின்றார்.

இதனையடுத்து விளக்குகள் அணைக்கப்படவே, பெரிய துணிகளால் ஜான் சீனாவின் உடலானது மறைக்கப்பட்டது. இதனையடுத்து, Poor Things படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை வழங்கினார் ஜான் சீனா.

ஆஸ்கர் விருது விழா

முன்னதாக 1947 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது விழாவில் டேவிட் நெவின் எலிசபெத் டெய்லரை அறிமுகம் செய்து கொண்டிருந்த போது ஆடையில்லாமல் ஒருவர் மேடையில் ஓடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் சீனாவின் இன்றைய நிகழ்வு குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகும் நிலையில், ‘அரங்கில் இருந்தவர்களை சிரிக்க வைக்க இப்படி ஒரு நிகழ்வை நடத்த வேண்டுமா?’ என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.