vijay - jason sanjay ani / video screenshot
சினிமா

”அப்பாவுக்கு கோவம் வந்தா அவ்வளவு தான்..” அப்பா விஜய் குறித்து ஜேசன் சஞ்சய்!

தமிழ் திரையுலகில் சிக்மா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகரும் முதலமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

Rishan Vengai

சிக்மா படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், அப்பா விஜயின் கோபத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அப்பா கோபமடையும் போது அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார். சிக்மா படம் நாளை அக்டோபர் 2 அன்று வெளியாக உள்ளது.

சந்தீப் கிஷன் நடிப்பில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சிக்மா. முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இந்த திரைப்படம், நாளை அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Jason Sanjay

சிக்மா ரிலீஸ்-க்கு முன்பு படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் ஜேசன் சஞ்சய், படம் பார்த்தபிறகு அப்பா கால் செய்தால் என்ன பேசுவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சயிடம், பொதுவான அப்பாக்கள் போல உங்க அப்பா செய்யக்கூடியது என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு என்னுடைய அப்பா-அம்மா இருவரையும் ஒப்பிட்டு பதில் சொல்கிறேன். அம்மாகிட்ட வாரத்துக்கு ஒரு தடவையாச்சும் திட்டு வாங்குவன். எதாவது பிரச்னை பண்ணி திட்டு வாங்கிட்டே இருப்பன். ஆனால், அப்பாக்களின் இயல்பு எப்படி இருக்கும் என்று நானும் என் நண்பர்களும் பேசிக்கொள்வோம்; எப்போதாவது, சில மாதங்களுக்கு ஒருமுறைதான் அப்பாவுக்கு கோவம்வரும். ஆனால் ஒருமுறை கோபப்பட்டுவிட்டால், அவ்வளவுதான். அதுதான் ஒரு அப்பாவின் இயல்பு. அதை நான் மதிக்கிறேன், நான் செய்யும் சில விசயங்கள் அவரை கோபமாக்கிவிடும். நான் எதாவது பொய் கூறும்போது இப்படி நடந்துள்ளது” என பேசியுள்ளார்.