2026-ம் ஆண்டு தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஹிட் படங்களில் முக்கியமான இரு படங்கள் விஐய் நடித்து வெளியான `ஜனநாயகன்' மற்றொன்று சூர்யாவின் `கருப்பு'. பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை மிகப்பெரிய வசூல் கொடுக்கும் நடிகர் விஜய். ஆனால் இந்த முறை `ஜனநாயகன்' படம் இணையத்தில் கசிந்தது படத்தின் வசூலை பாதித்ததாக சொல்லப்பட்டது. எனவே சூர்யாவின் `கருப்பு' படம் வசூலில் முந்திவிடும் எனவும் சொல்லப்பட்டது. இப்போது இந்த இரண்டு படங்களும் திரையரங்க ஓட்டத்தை நிறைவு செய்த நிலையில், வசூலின் உண்மை நிலை என்ன? வசூலில் முந்தியது `ஜனநாயகனா'? கருப்பா? எனவும் விசாரித்தோம்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்த ‘கருப்பு’, வெளியான சில நாட்களிலேயே மிகப்பெரிய வசூலை குவித்தது. எட்டு நாட்களில் உலகளவில் ₹200 கோடியை கடந்ததாக சொல்லப்பட்டது. இதன் மூலம் சூர்யாவின் அதிக வசூல் செய்த படமாகவும் ‘கருப்பு’ உருவெடுத்தது. பின்னர் 15 நாட்களில் உலகளவில் ₹300 கோடியை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. படத்தின் இறுதி உலகளாவிய வசூல் சுமார் 314 கோடி ரூபாய் Gross என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’, வெளியான நான்கு நாட்களிலேயே உலகளவில் ₹200 கோடியை கடந்தது. படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்த நிலையில், 18-வது நாளில் உலகளவில் சுமார் ₹318 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் 2026-ம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ‘கருப்பு’வை முந்தியுள்ளது என தகவல்.
இந்த இரண்டு படங்களின் போட்டியில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் இந்திய வசூல். ‘கருப்பு’ தனது திரையரங்க ஓட்டத்தின் முடிவில் இந்தியாவில் ₹314 கோடி க்ராஸ் வசூல் செய்தது. ‘ஜனநாயகன்’ படத்தின் திரையரங்க ஓட்டத்தின் முடிவில் இந்திய வசூல் ₹318 கோடி.
கருப்பு படத்தை விட 4 கோடி கூடுதல் வசூல் என சொல்லப்படுகிறது. இந்த வசூல் வித்தியாசம் இவ்வளவு குறைவாக `ஜன நாயகன்' படத்தின் இணைய கசிவு முக்கியமான காரணம் என சொல்கிறார்கள் சினிமா வர்த்தக நிபுணர்கள். இந்திய வசூலை மட்டும் எடுத்துக்கொண்டால், ‘ஜனநாயகன்’ மிகச்சிறிய வித்தியாசத்தில் ‘கருப்பு’வை முந்தியுள்ளது. அதேபோல் கிடைத்துள்ள வர்த்தக அறிக்கைகளின்படி உலகளாவிய வசூலிலும் ‘ஜனநாயகன்’ முன்னிலையில் உள்ளது. இதனால் 2026-ம் ஆண்டின் விஜய் vs சூர்யா வசூல் போட்டியில் ‘ஜனநாயகன்’ முதலிடத்தை பிடித்துள்ளது என்பதே தற்போதைய வர்த்தக நிலவரம். ஆனால் இரு படங்களுமே ₹300 கோடி கிளப்பில் இடம்பெற்றிருப்பது தமிழ் சினிமாவின் வலுவான சந்தையை மீண்டும் நிரூபித்துள்ளது