Maheshbabu Varanasi
சினிமா

" 'வாரணாசி' வெளியானதும் இந்தியாவே பெருமைகொள்ளும்" - Varanasi | Mahesh Babu | SS Rajamouli

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது.

Johnson

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, ப்ரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகிவரும் படம் `வாரணாசி'. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 100 அடி திரை அமைக்கப்பட்டு, அதில் படத்தின் தலைப்பு வீடியோவை திரையிட்டனர்.

Mahesh Babu

இந்நிகழ்வில் பேசிய மகேஷ்பாபு "வெளியே வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. இது கொஞ்சம் புதிதாக இருக்கிறது, ஆனால் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ’மேடை மேல் சாதாரணமாக நடந்து வருகிறேன்’ எனச் சொன்னேன். ’நடக்காது’ என்று சொல்லி இப்படி வர வைத்துவிட்டார்கள். ’என்னுடைய ஸ்டைலில், நீல சட்டை போட்டுக் கொண்டு நிகழ்வுக்கு வருகிறேன்’ எனச் சொன்னேன். ’முடியாது’ என இந்த உடையைக் கொடுத்தார்கள். ’பட்டன்கூட இல்லையே’ என்றேன், ’அது அப்படித்தான்’ என உறுதியாக சொல்லிவிட்டார்கள். நல்லவேளை, சட்டையே போடாமல் வர சொல்லவில்லை. அடுத்து அதையும் திட்டமிட்டிருப்பார்கள். இதெல்லாம் உங்களுக்காகத்தான். நீங்கள் அனைவரும் பொறுமையாக ஆதரவளித்ததற்கு நன்றி. அப்டேட்.. அப்டேட்.. எனக் கேட்டீர்களே, எப்படி இருக்கிறது அப்டேட்? என்னுடைய பட டயலாக்கைத்தான் சொல்ல வேண்டும், மைண்டு பிளாக் ஆகிவிட்டது.

என் தந்தை (கிருஷ்ணா) என்றால் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் சொல்லும் எல்லா விஷயங்களையும் கேட்பேன். ஒரே ஒரு விஷயத்தை தவிர. அவர் எப்போதும் 'நீ ஒரு புராண சினிமாவில் நடி, அந்த தோற்றத்தில் நன்றாக இருப்பாய். ஒரு சினிமா செய்’ என்பார். அவரின் அந்தப் பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் இன்று என் பேச்சை அவர் கேட்டுக் கொண்டிருப்பார். அவருடைய ஆசி எப்போதும் நம்முடன் இருக்கும்.

மகேஷ் பாபு

இது என் கனவுப் படம். ஒருவிதத்தில், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழும் விஷயத்தைப் போன்றது இது. இதற்காக எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமோ, அவ்வளவு கஷ்ட்டப்பட்டு உழைப்பேன். அனைவரையும் பெருமையடைய செய்வேன். மிக முக்கியமாக, என் இயக்குநரை அதிகமாக பெருமைகொள்ள செய்வேன். 'வாரணாசி' வெளியானதும், இந்தியாவே பெருமைகொள்ளும். இது வெறும் தலைப்பு அறிவிப்பு மட்டுமே. இனி வர இருப்பவை எப்படி இருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விடுகிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு வேண்டும். நீங்கள் காட்டும் அன்புக்கு 'நன்றி' என்று சொல்வது போதாது. நீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது. எப்போதும் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன். கைகூப்பி வணங்குவதை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்றார்.