தெலங்கானா மாநில திரைப்பட விருதுகளில் ராஷ்மிகா மந்தனா சிறந்த நடிகை விருதை பெற்றார். தனது நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்ட காலத்தை நினைவுகூர்ந்த அவர், இப்போது விருது பெற்றதை பெருமையாகக் கூறினார். 'தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக விருது பெற்றது, மேலும் பல படங்களை ஊக்குவிக்கும் என அவர் தெரிவித்தார்.
தெலங்கானா மாநில திரைப்பட விருதுகளான Telangana Gaddar Film Awards உகாதி தினமான நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் `தி கேர்ள் ஃபிரெண்ட்' படத்துக்காக சிறந்த நடிகை விருது பெற்றார் ராஷ்மிகா மந்தனா.
இந்த நிகழ்வில் பேசிய ராஷ்மிகா "ஒரு காலத்தில் என்னுடைய நடிப்புக்காக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. மிக பெரிய பாதையை கடந்து வந்ததை போல உணருகிறேன். தி கேர்ள் ஃபிரெண்ட் மாதிரியான படத்துக்காக விருது கிடைத்துள்ளது மிக சிறப்பானது. ஏனெனில் அது போன்ற நிறைய படங்கள் வருவதை அது ஊக்குவிக்கும். இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி.
நான் இங்கு மருமகளாய் வருவதற்கு முன் மகளாய் வந்தேன். அப்போது நிறைய அன்பு தந்தீர்கள். இப்போது ஒரு மருமகளாய் உங்கள் முன் நிற்கிறேன். பெருமையாய் இருக்கிறது, உங்கள் அன்புக்கு என்றும் நன்றியுள்ளவளாய் இருப்பேன்." என்றார்.