ரஜினிகாந்த் - ஹிருத்திக் ரோஷன் web
சினிமா

கூலி vs வார் 2 மோதல் | ’நீங்க தான் என் வாத்தியார்..’ ரஜினிக்கு வாழ்த்து சொன்ன ஹிருத்திக் ரோஷன்!

திரை வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த நடிகர் ரஜினிகாந்திற்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Rishan Vengai

1975-ம் ஆண்டு இதே ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி வெளிவந்த அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம், தமிழ் திரைத்துறை சினிமாவில் காலடி எடுத்துவைத்தார் நடிகர் ரஜினிகாந்த். அங்கிருந்து அவருடைய 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் பல்வேறு ஹிட் திரைப்படங்களை கொடுத்த ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார் என்ற ஸ்டார்டமை தன்தோளில் 50 ஆண்டுகளாக சுமந்துவருகிறார்.

ரஜினி

தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருந்துவரும் ரஜினிகாந்த், இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய முதல் சூப்பர் ஹீரோ என்ற பெருமையையும் கொண்டுள்ளார்.

ரஜினி

இந்நிலையில், 1975 ஆகஸ்டு 15-ம் தேதி அபூர்வ ராகங்கள் வெளியான நிலையில், 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 14-ம் தேதி கூலி திரைப்படம் ரஜினியின் நடிப்பில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் 35 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுடன் கிங் நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்களும் நடித்துள்ளனர்.

ரஜினியின் கூலி திரைப்படம்

நாளை கூலி வெளியாகும் அதேநாளில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கும் வார் 2 படமும் கிளாஸ் ஆகிறது.

இந்நிலையில் சினிமா வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

உங்கள் பக்கத்தில் இருந்துதான் என நடிப்பு பயணம் தொடங்கியது..

நாளை ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போவில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. இந்த சூழலில் கூலிக்கு எதிராக ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் காம்போவில் வெளியாகவிருக்கும் வார் 2 திரைப்படம் மோதவிருக்கிறது.

war 2

இந்த சூழலில், வார் 2-ஐ பின்னுக்கு தள்ளி ரஜினியின் கூலி திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துவரும் நிலையில், இந்திய சினிமாவில் 50 ஆண்டுகால திரைவாழ்வை நிறைவுசெய்திருக்கும் நடிகர் ரஜினிகாந்திற்கு பாலிவுட் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவுசெய்திருக்கும் அவர், “ஒரு நடிகராக எனது முதல் அடிகளை உங்கள் பக்கத்தில் இருந்துதான் எடுத்து வைத்தேன். நீங்கள் எனது முதல் ஆசிரியர்களில் ஒருவர், ரஜினிகாந்த் சார். தொடர்ந்து அனைவருக்கும் உத்வேகமாகவும், தரமாகவும் இருங்கள். 50 ஆண்டுகால திரை மேஜிக்கை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார். ஹிருத்திக் ரோஷனின் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.