Netflix Money Heist
ஹாலிவுட் செய்திகள்

"புரட்சி ஓயவில்லை, `Money Heist' உலகம் தொடர்கிறது.." சர்ப்ரைஸ் கொடுத்த நெட்ஃபிளிக்ஸ் | Netflix

2023ல் Money Heistன் பெர்லின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி Money Heist spin-off சீரிஸாக வந்தது `Berlin'. அதன் இரண்டாவது சீசன் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Johnson

உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் `Money Heist'. தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்பாகி பின்னர் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஸ்பானிஷ் சீரிஸான இது வெற்றியடைந்ததால், அதன் அடுத்த சீசன்களை எடுக்க துவங்கியது நெட்ஃபிளிக்ஸ். 2021ைல் வெளியான ஐந்தாம் சீசனோடு இந்த சீரிஸ் நிறைவடைந்தது என அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இந்த தொடர் கொரியா மொழியில் Money Heist: Korea – Joint Economic Area என 2020இல் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. 202ஈல் Money Heistன் பெர்லின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி Money Heist spin-off சீரிஸாக வந்தது `Berlin'. அதன் இரண்டாவது சீசன் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மீண்டும் Money Heist சீரிஸை பற்றி பேச்சுகளை எழுப்பியுள்ளது. நேற்று நெட்ஃபிளிக்ஸ் "புரட்சி இன்னும் முடியவில்லை, Money Heist உலகம் தொடர்கிறது..." எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், இது Money Heist கதையின் தொடர்ச்சியா அல்லது முன் கதையா? இல்லை Berlin போல spin-off-ஆ என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. என்னவா இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.