குவென்டின் டாரன்டினோ இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் நடித்து 2019ல் வெளியான படம் `Once Upon a Time... in Hollywood'. நிஜ சம்பவத்தை தழுவி டாரன்டினோ தன் கற்பனையை கலந்து இப்படத்தை எடுத்திருப்பார். இதில் ரிக் டிலன் என்ற நடிகர் ரோலில் டிகாப்ரியோவும், அவரது ஸ்டாண்ட் டபுள் கிளிஃப் பூத்தாக பிராட் பிட்டும் நடித்திருந்தனர்.
இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் படம் `The Adventures of Cliff Booth'. இப்படத்தின் கதையை குவென்டின் டாரன்டினோ எழுத, படத்தை டேவிட் ஃபின்ச்சர் உருவாக்கி வருகிறார். `Once Upon a Time... in Hollywood' படத்தின் வந்த கிளிஃப் பூத் பாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. பிராட் பிட் தான் இந்தப் படத்திலும் கிளிஃப் பூத் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் வெளியீடு பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது இப்படத்தை தயாரிக்கும் நெட்ஃபிளிக்ஸ். அதன் படி இப்படம் நவம்பர் 25ம் தேதியிலிருந்து இருவாரங்கள் உலகம் முழுக்க திரையரங்குகளில் ஓடும் எனவும், அதன் பின்னர் டிசம்பர் 25ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.