Clint Eastwood Clint Eastwood
ஹாலிவுட் செய்திகள்

ஓய்வை அறிவித்த OG இயக்குநர்! | Clint Eastwood

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இயக்குநராக தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பாடலாசிரியராக என சினிமாவில் பல துறைகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தார்.

Johnson

ஹாலிவுட்டில் மிகப்பிரபலமான நடிகர், இயக்குநர் க்ளின்ட் ஈஸ்ட்வுட். தொலைக்காட்சியில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இயக்குநராக தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பாடலாசிரியராக என சினிமாவில் பல துறைகளில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தார். நடிகராக A Fistful of Dollars, For a Few Dollars More, The Good, the Bad and the Ugly, Paint Your Wagon, The Beguiled உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார்.

Juror #2

மே 31ம் தேதி தனது 96 வயதை நிறைவு செய்தார் க்ளின்ட் ஈஸ்ட்வுட். இவர் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரது மகனும் இசையமைப்பாளருமான கைல் ஈஸ்ட்வுட் ஊடகம் ஒன்றிற்கு (பிரான்ஸ் 3) அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "அவருடன் பணியாற்றிய பல நல்ல நினைவுகள் எனக்கு உள்ளன. இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு 96 வயது. ஆனால், அவருடன் பல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டம். அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது." என்றார்.

கிளின்ட் ஈஸ்ட்வுட் முதலில் செர்ஜியோ லியோனின் ' Dollars Trilogy' வெஸ்டர்ன் திரைப்படங்கள் மூலம் சர்வதேசப் புகழ் பெற்றார். 'Dirty Harry' திரைப்படம் மூலம் ஒரு திரை அடையாளமாக உருவெடுத்தார். `Play Misty for Me' படம் மூலம் ஒரு இயக்குநராக அறிமுகமாகி `High Plains Drifter', `Magnum Force', ` Unforgiven', `Million Dollar Baby', `American Sniper', `The Mule', `Cry Macho' எனப் பல படங்களை இயக்கி வரவேற்பு பெற்றார். இவரின் கடைசி படமான `Juror #2' 2024ல் வெளியாகி பெரிய வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.