AVATAR : FIRE AND ASH முகநூல்
ஹாலிவுட் செய்திகள்

‘AVATAR : FIRE AND ASH’... வெளியானது ஃபஸ்ட் லுக் போஸ்டர்!

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றியை அள்ளி சென்ற அவதார் படத்தின் பாகம் 3ன் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 ஆம் தேதி வெளியான திரைப்படம் அவதார். ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக அறியப்படும் ஜேம்ஸ் கேமரூன், ஏலியன், டெர்மினேட்டர், டைட்டானிக் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். உலக அளவில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இவரது படங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. டைட்டானிக் திரைப்படம் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது, பின்னர் அவதார் அந்த இடத்தை பிடித்தது. தற்போது வரை அவதார் திரைப்படமே அதிக வசூல் செய்த படமாக உள்ளது. அவதார் படம் 25 கோடி அமெரிக்க டாலர்கள் பொருள்செலவில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டாலர்கள் வசூலை அள்ளி வசூல் சாதனையை நிகழ்த்தியது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் 52,000 திரைகளில் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் , இதன் 3-ம் பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ இந்த ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாக இருக்கிறது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்தப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பட டிரெய்லரின் முதல் கிளிம்ப்ஸ், வரும் 25-ம் தேதி ‘தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்’ படத்துடன் வெளியாகிறது. படத்தின் டிரைலரை தி ஃபென்டாஸ்டிக் ஃபோர் படத்தின்போது பிரத்தியேகமாக திரையரங்குகளில் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை அவதார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.