suriya scene movie poster
சினிமா

ரஜினி, விஜய் யாருமே செய்யாத சம்பவம்.. ’200 கோடி வசூலில் ஹாட்ரிக்..’ சூர்யா செய்யப்போகும் சாதனை!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்திருக்கும் சீன் திரைப்படத்தின் 3 நாள் வசூல் 150 கோடியை நெருங்கியுள்ளது.

Rishan Vengai

'சீன்' திரைப்படம் தீபாவளி பண்டிகையை தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிவருகிறது. சூர்யா, ரஜினி, விஜய் கூட செய்யாத சாதனையை படைத்து, 200 கோடி வசூலில் ஹாட்ரிக் கொடுக்க உள்ளார்.

கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என்ற இரண்டு ஹிட் படங்களை கொடுத்ததற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்திருக்கும் புதிய திரைப்படம் சீன் (SCENE).  சூர்யாவின் 47வது திரைப்படமான இப்படம் ரோமஞ்சம், ஆவேசம் படங்களை இயக்கிய சித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சூர்யா உடன் நஸ்ரியா, லால் மற்றும் லுங்கிபாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுசின் ஷ்யாம் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளனர்.

Scene movie

படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை ஈர்த்த நிலையில், நவம்பர் 6ஆம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் வெற்றிகரமாக ஓடிவருகிறது. காமெடி கிரைம் திரில்லராக வெளிவந்த சீன் திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் 145 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 8-ம் தேதி மட்டும் இந்தியா முழுவதும் 6,001 காட்சிகளில் திரையிடப்பட்டு ரூ.23.25 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால், திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் 'சீன்' படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படங்கள் இரண்டுமே 200 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியிருந்த நிலையில், சீன் திரைப்படமும் 200 கோடி வசூலை நெருங்கியிருப்பதால் 200 கோடி வசூலில் ஹாட்ரிக் கொடுத்த முதல் தமிழ் சினிமா நடிகராக சூர்யா சாதனை படைக்க உள்ளார்.

நடிகர் விஜய் தொடர்ந்து 3 ஆண்டுகள் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்துள்ளார். அதேபோல ஒரே ஆண்டில் இரண்டு ஹாட்ரிக் 200 கோடி வசூலையும் கொடுத்துள்ளார்.

நடிகர் ரஜினியும் பல 200 கோடிக்கும் மேலான படங்களை கொடுத்திருந்தாலும், ஒரே ஆண்டில் இரண்டு 200 கோடி படங்களை மட்டுமே கொடுத்திருக்கிறார். இதன்மூலம் ரஜினி, விஜய் கூட செய்யாத ஒரே ஆண்டில் மூன்று 200 கோடி வசூல் படங்களை கொடுத்த முதல் தமிழ் சினிமா நடிகராக சூர்யா சாதனை படைக்கவிருக்கிறார்.