ajith kumar x page
சினிமா

அஜித்குமாரின் 'குட் பேட் அக்லி' ட்ரெய்லர்.. சொல்வது என்ன?

அஜித்குமாரின் குட் பேட் அக்லி டிரெய்லர் வெளியாகி, இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

Johnson

அஜித்குமாரின் குட் பேட் அக்லி டிரெய்லர் வெளியாகி, இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ரசிகர்கள் அனைவருக்கும் கொண்டாட்டமாக அமைந்ததோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையம் எகிற வைத்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், படத்தின் வின்டேஜ் அஜித் சம்பந்தப்பட்ட ரெஃபரன்ஸ்கள். இந்தப் படத்தின் டீசரில் சில ரெஃபரன்ஸ்கள் வைத்திருந்தார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். எனவே இப்போது குட் பேட் அக்லி டீசர், டிரெய்லரில் இருந்த அஜித் ரெஃபரன்ஸ் மற்றும் Other Reference என்னென்ன என இந்த வீடியோவில் Decode செய்யலாம்...

ajithkumar

குட் பேட் அக்லி டீசர் பொறுத்தவரை பெரிய அளவில் எதுவும் இல்லை என்றாலும், அதற்குள்ளும் சில விஷயங்கள் இருக்க தான் செய்தன. பில்லா படத்தில் அஜித்தின் கோர்ட் கெட்டப்பை நினைவுபடுத்தும் படியான காட்சி இருந்தது. தீனா படத்தில் அஜித் கையில் எடுக்கும் knuckle duster ஆயுதத்தை, இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். பரமசிவன் படத்தின் துவக்கத்தில் அஜித் ஜெயில் கைதியாக தான் இருப்பர். அந்தப் படத்தில் வரும் ஜெயில் பாடல் மிகப் பிரபலம். அதே போல இந்தப் படத்திலும் ஒரு ஜெயில் பாடலை வைத்திருக்கிறார்கள்.

வாலி படத்தில் இரண்டு அஜித் என்பதால், அண்ணன் அஜித், அதாவது வில்லன் அஜித்திற்கு வித்யாசம் காட்ட வேண்டும் என்பதற்காக சிக்லெட் மெல்லும் பழக்கம் இருப்பதாக காட்டியிருப்பார்கள். அதே ஸ்டைலில் இப்படத்திலும் சிக்லெட் போட்டிருக்கிறார் அஜித். சிங்கம்புலி இயக்கத்தில் அஜித் நடித்த ரெட் படத்தில், அஜித்தின் பன்ச் டயலாக் `அது'. அந்த டயலாக்கையும் இதில் சேர்த்திருந்தார்கள்.

இவை தவிர அஜித் இனி தன்னை தல என அழைக்க வேண்டாம், AK அல்லது அஜித்குமார் என அழைக்குமாறு கூறினார். எனவே படத்தில் அஜித்துக்கு AK என்றே பெயரை வைத்துவிட்டார். இது போல இப்போது அஜித் கலக்கிக் கொண்டிருக்கும் கார் ரேஸையும் உள்ளே செறுக்கிவிட்டார்கள். டீசரின் இறுதியில் அஜித் தன் ரசிகர்களை பார்த்து சொல்வதை போல, "My Darlings Missed You All" என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏன் என வீடியோவின் இறுதியில் சொல்கிறேன். இப்போது டிரெய்லரில் இருக்கும் Referenceகளை பார்க்கலாம். டிரெய்லரின் துவக்கத்திலேயே, அர்ஜுன் தாஸ் Varalaru, Villain என பழைய அஜித் பட பெயர்களை சொல்லி துவங்குவார்.இப்போது வரை அஜித் கரியரில் மிக முக்கியமான படம் மங்காத்தா. அதற்கு சிறப்பு செய்யவில்லை என்றால் எப்படி? மங்காத்தாவில் அஜித் சொன்ன This is my பீப் game என்ற வசனத்தை இதில் அர்ஜுன் தாஸ் சொல்வார்.

ajithkumar

மங்காத்தா யுனிவர்சஸை மீண்டும் குறிக்கும்படி, அந்தப் படத்தில் த்ரிஷாவின் அப்பா ஜெயப்பிரகாஷை காரில் இருந்து அஜித் தள்ளிவிட்ட சம்பவத்தை, இந்த டிரெய்லரில் குறிப்பிடுவார் த்ரிஷா. தீனாவில் புகழ்பெற்ற மாஸ் வசனமான "உடம்புல கை இருக்கும் கால் இருக்கும், மூக்கிருக்கும், முழி இருக்கும். ஆனா உயிர்?" என்பதை அஜித்தே மீண்டும் சொல்லியிருப்பார். இவை தவிர பழைய மற்றும் சமகால வைரல் விஷயங்களையும் படத்தில் இணைத்திருக்கிறார் ஆதிக்.

உலகம் முழுக்க மைக்கேல் ஜாக்சன் மக்களை தன் இசையால் கவர்ந்தார். ஆனால் அந்த மைக்கேல் ஜாக்சனுக்கே ஒரு தமிழ் பாடலை கொடுத்தது தமிழ்நாடுதான். 2008ன் பிற்பகுதியில் மிகப் பிரபலமான ஒரு பாடல் "அக்கா மக... அக்கா மக... எனக்கொருத்தி இருந்தாளே". இந்தப் பாடலை மைக்கேல் ஜாக்சனின் BAD, THRILLER, BEAT IT போன்ற பாடல்களின் வீடியோவை வைத்து வெளியிட்டு பெரிய ஹிட்டானது. இந்தப் பாடலையும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார். டிரெய்லரில் கூட மைக்கேல் ஜாக்சன் வேடமிட்ட ஒருவர் வருவதையும் பார்க்க முடிந்தது. மார்க் ஆண்டனி படத்தில், பஞ்சு மிட்டாயை பறக்க விட்ட ஆதிக், குட் பேட் அக்லியில் ஒத்த ரூபாயை சிதறவிட்டிருக்கிறார். இணையத்தில் வைரலாக போன் கால் ரெக்கார்டிங், 10 கிலோ கறி வேணும்... இருங் பாய். இதையும் படத்தில் ட்ரெண்டுக்கு ஏற்ப நுழைத்திருக்கிறார். ஏடிஎம் கார்ட் நம்பரை பெற்று நூதன மோசடி செய்த சம்பவத்தை மையமாக வைத்து நெட்ஃப்லிக்ஸில் வெளியான தொடர் ஜம்தாரா. அதனை மையமாக வைத்து விஜய் வரதராஜ் தன் யூ-டியூபில் வெளியிட்ட கார்டு மேலே 16 நம்பர் என்ற வீடியோ பெரிய வைரலானது. அதில் இடம்பெற்ற "கார்டு மேலே 16 நம்பர் இருக்கும் அத சொல்லுங்க சார்" என்ற வசனத்தை இதில் அஜித் பேசுவது போல் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ajithkumar

டீசர் பற்றி சொல்லும் போது அதன் இறுதியில் அஜித், "My Darlings Missed You All" என்ற வசனம் இடம் பெற்றிருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த வீடியோவின் இறுதியில் அதை பற்றி சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. டீசரில் இடம்பெற்ற அந்த வசனத்துக்கான Payoff, ட்ரெய்லரில் வரும் கடைசி வசனமாக அமைந்திருக்கும். அஜித் சொல்லும் "My Darlings Missed You All" என்பதற்கு, பதிலளிக்கும் படி, சிம்ரன் "ரொம்ப வருஷம் ஆச்சுல்ல, I miss you" என்பார். அஜித் சிம்ரன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிப்பதை இது குறிக்கலாம். அதே சமயம், கலர் ஃபுல்லாக ஒரு படத்தை அஜித் கொடுத்து பல வருடங்கள் ஆகிறது.

அதை GBU பூர்த்தி செய்யும் எனவும் எடுத்துக் கொள்ளலாம் .

மேலே சொன்னது போல குட் பேட் அக்லி டீசர், டிரெய்லரில் நீங்கள் கவனித்த வேறு Reference இருந்தால் அதை கமெண்டில் நீங்கள் பதிவிட்டுங்கள்...