இது OG சம்பவம் இல்ல.. ஃபேன் பாய் சம்பவம்! வெளியானது ’குட் பேட் அக்லி’ முதல் லிரிக்கல் வீடியோ!
சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாத நிலையில், ஒரே நம்பிக்கையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமானது.
அதற்கேற்றார்போல் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசர் ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட ஒரு ஃபேன் பாய் டீசராக வெளியாக்கி மிரட்டியது. அஜித்தை எந்த திரைப்படங்களில் எல்லாம் பார்த்து பிடித்துப்போனதோ, அப்படியான வாலி, ரெட், பில்லா, மங்காத்தா, வேதாளம் முதலிய படங்களின் ரெஃபரன்ஸை வைக்காமல், அஜித்தையே அப்படி நடிக்க வைத்திருந்தது ’என்னமோ பண்ணிருக்கான் யா இந்த மனுசன்’ என ஆதிக் ரவிச்சந்திரன் வேலையை கண்டு அஜித் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.
அதுமட்டுமில்லாமல் குறுகிய காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட டீசர் என்ற சாதனையை குட் பேட் அக்லி டீசர் சம்பவம் செய்த நிலையில், தற்போது OG சம்பவம் என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப்பாடலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
ஃபேன் பாய் சம்பவம் செய்த ஆதிக் ரவிச்சந்திரன்..
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ’குட் பேட் அக்லி' படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கில் புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பாடலான OG சம்பவம் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. பாடலை ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இருவரும் பாடியுள்ளனர்.
முழுக்க முழுக்க ஒரு ஃபேன் பாய் சம்பவமாக வெளியாகியிருக்கும் பாடலின் வரிகள், இடம்பெற்றிருக்கும் அஜித்தின் புகைப்படங்கள், ஆதிக் 'AK' என கத்துவது, பாடலின் முடிவில் மன்னிப்பே கிடையாது என்ற இடத்தில் வார்த்தை வராமல் அஜித்குமார் சிரிப்பது மற்றும் பாடலில் அஜித்குமார் பேசும் வசனம் இடம்பெற்றிருப்பது என OG சம்பவம் லிரிக்கல் வீடியோவானது ஃபேன் பாய் சம்பவமாக வெளிவந்துள்ளது.