இந்திய சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `காந்தா'. இப்படத்திற்கு அடுத்ததாக நஹாஸ் ஹிதாயத் இயங்கிவந்த `ஐ ஆம் கேம்' படத்தில் நடித்து வந்தார். இப்படம் தற்போது நிறைவடைந்துள்ளது.
2023ல் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் வெளியான `RDX' மலையாளப்படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதற்கு அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் `ஐ ஆம் கேம்' படப்பிடிப்பை துவங்கினார். இதன் கதையை ஷஹாபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து எழுதியுள்ளனர். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், தமிழ் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஆக்ஷன் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் வடிவமைத்துள்ளனர். `லோகா' படத்திற்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் வழங்கும் அடுத்த முக்கிய படமாகும். இந்தப் படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 11 மாதங்கள் நீண்டது. மொத்தம் 156 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்போது படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. துல்கர் சல்மானின் 40வது படமாக உருவான இது மலையாளம் மட்டுமல்லாது, தமிழ் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட உள்ளனர்.