Mohanlal Drishyam 3
சினிமா

`த்ரிஷ்யம் 3' ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு! | Drishyam 3 | Mohanlal | Jeethu Joseph

திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ் குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார்.

Johnson

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடித்து சமீபத்தில் வெளியான படம் `த்ரிஷ்யம் 3'. இப்படத்துக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து பெரிய அளவில் வசூலும் செய்தது. கடந்த இரண்டு பாகங்களை போலவே இந்த பாகத்திலும் தன் குடும்பத்தை காப்பாற்ற ஜார்ஜ் குட்டி என்ன எல்லாம் செய்கிறார் என்பதே கதை. தற்போது இப்படம் ஜூன் 18ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறுகையில் “திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ் குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தை காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்கிறது. அதனால் இது இந்தத் தொடரில் மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை பிரைம் வீடியோவில் காணப்போகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

நடிகர் மோகன்லால் கூறுகையில் “ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. அவர்கள் அளித்த அன்பை நான் மிகவும் மதிக்கிறேன். திரிஷ்யம் ரசிகர்களுக்கு பிடிக்க காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.