இயக்குநர் மகிழ் திருமேனி - அஜித் புதிய தலைமுறை
சினிமா

“அஜித் கை தூக்கிவிட்டவர்களில் நானும் ஒருவன்” - இயக்குநர் மகிழ் திருமேனி நெகிழ்ச்சி!

மோகன்லாலின் L2: Empuraan பட நிகழ்ச்சியில் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி.

ஜெ.நிவேதா

மோகன்லாலின் L2: Empuraan பட நிகழ்ச்சியில் அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. நிகழ்ச்சியில் பேசிய மகிழ் திருமேணி,

நான் பத்மஸ்ரீ அஜித் சார் குறித்து பேசாமல் இந்த மேடையை விட்டு நகரமுடியாது. அஜித் சார் கைகொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். உங்களை இந்த தருணத்தில் ரொம்பவும் மிஸ் ஆகிறேன் அஜித் சார். இதையெல்லாம் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.

எனக்கும், எங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி சார். பிப்ரவரி 6-ம் தேதிக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம். அந்த தருணத்தில் உங்களோடு இருக்க விரும்புகிறேன்” என்றுள்ளார்.