OM OM Poster
சினிமா

’இனி தனுஷின் எழுச்சி..’ 3 நாளில் 100 கோடி வசூலை கடந்து ’ஓம்’ சாதனை!

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஓம்' திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் உலகளவில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து மிரட்டியுள்ளது.

Rishan Vengai

தனுஷ் நடிப்பில் உருவாகிய 'ஓம் ஆப்ரேசன் மோல்' திரைப்படம், 3 நாட்களில் உலகளவில் 101.7 கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. கேங்ஸ்டர்-போலீஸ் கதைப்பிண்ணனியில் உருவான இப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அமரன் திரைப்பட வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் ஓம் ஆப்ரேசன் மோல். நடிகர் தனுஷ் லீட் ரோலில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட்டடித்தன. இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது.

OM chapter 1

கடந்த 20ஆம் தேதி திரையரங்கில் வெளியான ஓம் திரைப்படம், கேங்ஸ்டர் - போலீஸ் ஆப்ரேசன் கதைப்பிண்ணனியில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தசூழலில் தான் இத்திரைப்படம் வெளியான 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வுண்டர்பார் நிறுவனம் அறிவித்திருக்கும் அறிவிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓம் திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 101.7 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சதம் ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.