அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், தற்போது மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் பயோபிக்கிலும் நடிக்க இருக்கிறார்.
இட்லி கடை, தேரே இஷ்க் மெய்ன் என நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில், தற்போது மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறும் இணைந்துள்ளது.
கேன்ஸ் பட விழாவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தநிலையில்,இது குறித்து அறிவிப்பை இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்.
“உத்வேகமிக்க தலைவரான அப்துல் கலாம் அய்யாவின் வாழ்க்கையை சொல்லும் படத்தில் நான் நடிப்பதை எனது பாக்கியமாக கருதுகிறேன்” என தனுஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் First Look Poster யும் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை ‘ஆதிபுருஷ்’ பட இயக்குனர் ஓம் ராவத் இயக்குவதாகவும், மெர்குரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.அப்துல் கலாம் பயோபிக் படம் அவர் எழுதிய 'அக்னி சிறகுகள்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.