ஓடிடி திரைப்பார்வை
ஓடிடி திரைப்பார்வைpt

Heart Beat S2 |ACE|School .. இந்த வார ஓடிடி தியேட்டர் லிஸ்ட் இதோ..!

Heart Beat S2 | katha Sudha|School .. உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் வெளியாக இருக்கின்றன.

1. Series

Heart Beat S2 (Tamil) Jio Hotstar - May 22

அதிகம் வரவேற்கப்பட்டு ஹார்ட் பீட் சீரிஸின் இரண்டாவது சீசன். மருத்துவமனையில் நடக்கும் விஷயங்களே கதை.

2. OTT

katha Sudha: Calling Bell (Telugu) Etv WIN - May 18

ஸ்ரீகாந்த் தேவரகொண்டா இயக்கியுள்ள சீரிஸ் `Katha Sudha: Calling Bell'. ஆந்தாலஜியாக ஒவ்வொரு வாரமும் வரும் குறும்படத்தின் இந்த  வார ரிலீஸ் இது.

3. Fountain of Youth (English) Apple TV+ - May 23

Guy Ritchie இயக்கத்தில் ஜான் கரன்ஸ்கி, நடாலி போர்ட்மென் நடித்துள்ள படம் `Fountain of Youth'. சகோதரர்கள் ஒன்றிணைந்து ஒரு தேடலில் ஈடுபடுவதே கதை.

4. Post Theatrical Digital Streaming

Abhilasham (Malayalam) Prime - May 23

சம்ஸு சாய்பா இயக்கத்தில் சய்ஜூ குரூப், தன்வி ராம், அர்ஜுன் அஷோகன் நடித்த படம் ` Abhilasham'. குழந்தை பருவத்தில் பிரிந்த இரு நண்பர்கள், பல ஆண்டு கழித்து சொந்த ஊரில் சந்தித்துக் கொள்ள, அதன் பின் நடப்பவையே கதை.

5. Theatre

Ace (Tamil) - May 23

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் `ஏஸ்'. புதிய வாழ்க்கையை துவங்க மலேஷியா வரும் கண்ணனுக்கு அங்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளே கதை.

6. School  (Tamil) - May 23

வித்யாதரன் இயக்கத்தில் யோகிபாபு  நடித்துள்ள படம் `ஸ்கூல்'. பள்ளியில் இறந்து போன இருவரின் ஆவி, பள்ளிக்குள் என்ன விஷயங்களை செய்கிறது என்பதே கதை.

7. Myyal (Tamil) - May 23

ஏழுமலை இயக்கியுள்ள படம் `மையல்'. இரண்டு பேர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே கதை.

8. Vembu (Tamil) - May 23

ஜஸ்டின் இயக்கியுள்ள படம் `வேம்பு'. வேம்பு என்ற பெண்ணின் வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் பற்றிய படம். 

9. Narivetta (Malayalam) - May 23

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ், சேரன் நடித்துள்ள படம் `Narivetta'. காவல்துறை எதிர்கொள்ளும் ஒரு அசாதாரண சூழல் பற்றிய கதை.

10. Azadi (Malayalam) - May 23

ஜார்ஜ் இயக்கியுள்ள படம் `Azadi'. பிரசவத்திற்காக மருத்துவமனை வரும் கொலைக் குற்றவாளி, அவரை தப்பிக்க வைக்க அவளின் கணவன் போடும் திட்டமே கதை.

11. United Kingdom of Kerala (Malayalam) - May 23

அனு வைகா இயக்கியுள்ள படம் `United Kingdom of Kerala'. டோனி வெளிநாடு செல்லும் கனவுடன் இருக்கிறார். ஆனால் அந்த முடிவை அவர் மாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

12. Lilo & Stitch (English) - May 23

Chris Sanders - Dean DeBlois இயக்கியுள்ள படம் `Lilo & Stitch'. 2002ல் அனிமேஷனில் வந்த படத்தின் லைவ் ஆக்ஷன் வெர்ஷன் தான் இது. ஏலியனுடன் நட்பு கொள்ளும் ஒரு சிறுமியின் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com