கூலி, வார் 2 எக்ஸ் தளம்
சினிமா

Coolie Vs WAR2 | 4 நாட்களில் வசூல் எவ்வளவு?

‘கூலி’ படம் ரிலீஸாகி நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், முதல் மூன்று நாட்களில் மட்டும் அப்பட்ம், இந்தியாவில் 158.35 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Prakash J

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்திருக்கும் ’கூலி’ படமும் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘வார் 2’ படமும் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இரண்டு படங்களும் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. அதிலும், ரஜினியின் ‘கூலி’ படம் முன்பதிவு டிக்கெட் வசூலிலேயே சாதனை படைத்தது. இந்த நிலையில் படம் ரிலீஸாகி நான்கு நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், ’கூலி’ வெளியான முதல் மூன்று நாட்களில், இந்தியாவில் 158.35 கோடி ரூபாய் வசூலித்தது. பின்னர், நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.35 கோடி வசூலைத் தந்தது. அதன் விளைவாக, நான்கு நாள் உள்நாட்டு வசூலில், அப்படம் 194.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதேபோல், இப்படம் சர்வதேச அளவிலும் சிறந்த வசூலைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. மூன்று நாட்களில் வெளிநாடுகளில் 16 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வசூலாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் உலகளவில் 300 கோடி டாலரைத் தாண்டியுள்ளது எனவும், இது, வார இறுதியில் 600 கோடி டாலரை எட்டுவதற்கான வாய்ப்பைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.

coolie

அதேநேரத்தில், ‘கூலி’ படத்துடன் வெளிவந்த மற்றும் இந்தியா முழுவதும் அதிக திரைகளைப் பெற்ற ‘வார் 2’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பின்தங்கியுள்ளது. ‘கூலி’ ஏற்கனவே ரூ.190 கோடியைத் தாண்டி, விரைவில் ரூ.200 கோடியை எட்டும் அதேவேளையில், ’வார் 2’ இந்தியாவில் ரூ.170 கோடி நிகர வசூலுடன் பின்தங்கியுள்ளது. கூடுதலாக, அதன் வெளிநாட்டு வசூல் (5 மில்லியன் டாலர்) ’கூலி’யின் 16 மில்லியன் டாலரைவிட மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.