Chiranjeevi Mana Shankara Vara Prasad Garu
சினிமா

சிரஞ்சீவி படத்தின் ரேட்டிங், விமர்சனத்துக்கு தடையா? | Mana Shankara Vara Prasad Garu | Chiranjeevi

உண்மையான விமர்சனங்களைவிட போலியாக பரப்பப்படும் கருத்துகளே அதிகம். எனவே இதனை தடுக்கும் ஒரு வழியை கையில் எடுத்துள்ளது.

Johnson

சிரஞ்சீவி, வெங்கடேஷ், நயன்தாரா நடிப்பில் அனில் ரவிப்புடி இயக்கியுள்ள படம் `Mana Shankara Vara Prasad Garu'. ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொதுவாகவே ஒரு படம் வெளியானால், அப்படம் பற்றி வெளியாகும் உண்மையான விமர்சனங்களைவிட போலியாகப் பரப்பப்படும் கருத்துகளே அதிகம். எனவே இதனை தடுக்கும் ஒரு வழியை கையில் எடுத்துள்ளது `Mana Shankara Vara Prasad Garu' டீம்.

Chiranjeevi

படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் தளங்களில் ரேட்டிங் மற்றும் படம் பற்றிய கருத்தை பகிரக்கூடிய வசதி உண்டு. பெரும்பாலும் இந்த தளங்களில் Bot மூலம் போலியான ரேட்டிங் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் டிக்கெட் முன்பதிவு தளங்களில் இந்த ரேட்டிங் மற்றும் கருத்துகளை பதிவிடும் வசதி நீக்கப்பட்டுள்ளது.

கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான `The Devil' படத்துக்கும் இதேபோன்ற தடை நீதிமன்றத்தின் மூலம் பெறப்பட்டது. இப்போது இந்தத் தடையை பெற்றுள்ள இரண்டாவது இந்தியப் படமாக மாறியுள்ளது `Mana Shankara Vara Prasad Garu'. விரைவில் இந்த வழிமுறை மற்ற மொழி சினிமாக்களுக்கு வரும் எனச் சொல்கிறது சினிமா வட்டாரங்கள்.