ஒரு படத்துக்கு டைட்டில் முக்கியம். இதற்காக இயக்குனர்களும், உதவி இயக்குனர்களும் தலையை பிய்த்துக்கொண்டு அலைவது கோலிவுட் அறிந்த உண்மை. சிலர் இதற்கு முன் வெளியான படங்களின் டைட்டிலை அனுமதியோடு வாங்கி தங்கள் படத்துக்கு வைப்பார்கள். பல ரஜினி பட டைட்டில்கள் இப்படி சில புதிய படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் இன்னொரு ரஜினி பட டைட்டிலை, தனது படத்துக்கு வைக்க நினைத்தார் இயக்குனர் கார்த்திக் ராஜூ. பிறகு அதை மாற்றிவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
'திருடன் போலிஸ்', 'உள்குத்து' படங்களை இயக்கிய கார்த்திக் ராஜூ, அடுத்து இயக்கும் படம், ‘கண்ணாடி’. இதில் சந்தீப் கிஷன் ஹீரோ. இவர், 'மாநகரம்', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'மாயவன்' படங்களில் நடித்தவர். தெலுங்கிலும் நடித்துவருகிறார்.
இந்தி நடிகை அன்யா சிங் ஹீரோயின். இவர் யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஹபிப் ஃபைசல் இயக்கிய ’கைதி பேண்ட்’ என்ற இந்தி படத்தில் நடித்தவர். மற்றும் ஆனந்த ராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், முரளி சர்மா, பிரகதி, திவ்யா கணேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை, தமன். ஒளிப்பதிவு, பி.கே.வர்மா. வி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஸ்ரீ சரவண பவா ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறது.
Read Also -> வெஸ்ட் இண்டீஸை நொறுக்கி இந்தியா அபார வெற்றி
படம் பற்றி கார்த்திக் ராஜூ கூறும்போது, ’இது ரொமான்ட்டிக் த்ரில்லர் படம். வழக்கமான ஹாரார் படங்களை போல இது இருக்காது. ரசிகர்க ளுக்கு புதிய த்ரில் அனுபவங்களை கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளேன். நாம், நமது தவறுகளை மற்றவர்களிடம் இருந்து மறைக்கலாம். ஆனால் மனசாட்சியிடம் மறைக்க முடியாது. உண்மை முகத்தை கண்ணாடி காட்டிக்கொடுத்துவிடும். நமது சின்ன கவனக் குறைவால் மற்றவர்கள் வாழ்க்கை பயங்கரமாகப் பாதிக்கப்படுவது மன்னிக்க முடியாத செயல். அதுதான் படத்தின் லைன். கண்டிப்பாக இது வித்தியாசமான த்ரில்லராக இருக்கும். இந்தப் படத்துக்கு முதலில் ரஜினிகாந்தின் ’அதிசய பிறவி’ படத்தின் டைட்டிலை வைக்கலாம் என முடிவு செய்தோம்.
படம் தமிழ், தெலுங்கில் உருவாவதால் அதற்கு ஏற்ற மாதிரியும் கதைக்கு ஏற்ற மாதிரியும் டைட்டில் வைக்கலாம் என ’கண்ணாடி’ என மாற்றி னோம். படத்துக்கு ஒரிஜினல் டைட்டில் வேண்டும் என்பதால் இப்படி செய்தோம். சந்தீப் மற்றும் அன்யா சிங் இருவரும் எம்.பி.ஏ மாணவர்களா க படத்தில் நடித்திருக்கிறார்கள்’ என்றார்.