F1 Movie x
சினிமா

பிராட் பிட்டின் 'F1' புயல்: பாக்ஸ் ஆபிஸில் சாதனை வேட்டை... படத்தின் வசூல் எத்தனை கோடி.?

ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் வேகமும், விறுவிறுப்பும் நிறைந்த திரில்லர் படமான 'F1', ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் பிராட் பிட்டின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

PT WEB

சீ. பிரேம்

ஜோசப் கோசின்கி இயக்கத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸடார் பிராட் பிட் நடித்துள்ள படம் 'F1'.எப்போதும் போல ஸ்போர்ட்ஸ் டிராமா படங்களுக்கே உரித்தான யூகிக்க கூடிய எளிமையான கதைக்களத்தை கொண்டிருந்தாலும், படம் திரைக்கதையிலும் அதை காட்சிப்படுத்திய விதத்திலும், சுவாரசியத்தை பார்வையளார்களிடம் கொண்டுபோய் சேர்க்கிறார் இயக்குனர். மேலும் ஐமேக்ஸ் கேமாராவில் F1 படத்தை படமாக்கியது, பிரம்மாணடத்தை கூட்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்தது. இதன் காரணமாகவே இத்திரைப்படம் பிராட் பிட் - ன் முந்தைய திரைப்படங்களின் வசூல் சாதனைகளை பின்னுக்கு தள்ளி பிராட் பிட்டின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

உலகளவில், இந்திய மதிப்பில் சுமார் 4600 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப் படம், பிராட் பிட்டின் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. ஒன்றரை மாதத்தில் இந்த வசூல் சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில், பிராட் பிட் நடித்த 'World War Z' மற்றும் 'Troy' போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. ஆனால், அந்தப் படங்களின் வசூலை 'F1'அசால்ட்டாக முறியடித்து, முதல் இடத்தைப் பிடித்துள்ளது.பிராட் பிட்டின் திரை வாழ்க்கை பயணத்தில், இந்த 'F1' திரைப்படம் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.