Salman Khan Maatrubhumi
பாலிவுட் செய்திகள்

சல்மான் கான் படத்தின் பெயர் மாற்றம்! | Salman Khan | Battle of Galwan

ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங்கின் 'India’s Most Fearless 3' புத்தகத்தின் பகுதிகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.

Johnson

சல்மான் கான் நடிப்பில் அபூர்வா லாக்கியா இயக்கிவரும் இந்தி படம் `Battle of Galwan'. 2020இல் கல்வான் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கி வருகிறது. இப்போது இந்தப் படத்தின் பெயரை மாற்றுவதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி, `Battle of Galwan' என இருந்த இப்படத்தின் பெயர் `Maatrubhumi' என மாற்றப்பட்டுள்ளது. மேலும் May war rest is peace என்ற டேக் லைனும் இணைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தின் டீசர் `Battle of Galwan' வெளியானது. மேலும் இப்படத்தின் முதல் பாடலாக Maatrubhumi என்ற பாடல் ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்போது அதே பெயரை படத்திற்கும் வைத்துள்ளனர். இந்தப் பெயர் மாற்றத்திற்கான தெளிவான காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

2020ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதலை மையமாக வைத்து ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங்கின் 'India’s Most Fearless 3' புத்தகத்தின் பகுதிகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது இப்படம். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், அக்‌ஷய் குமார் நடித்த `பூத் பங்களா' படத்துடன் மோதலை தவிர்த்து சுதந்திர தினத்துக்கு வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது புது தலைப்புடன் வெளியாகியுள்ள போஸ்டரில் ரிலீஸ் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.