ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் `துரந்தர்'. அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் எனப் பலரும் இதில் நடித்திருந்தனர். ஸ்பை த்ரில்லர் படமாக உருவான இப்படம் உலகளவில், ரூ.1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகத்தைவிட மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் இந்திய வசூல் 173 கோடி ரூபாய் எனச் சொல்லப்படுகிறது. இந்திய அளவில் முதல் நாள் வசூலில் சாதித்த படங்களை எல்லாம் முறியடித்து முதல் இடத்தில் இருக்கிறது துரந்தர் 2. உலக அளவில் முதல் நாள் வசூல் 247 கோடி. வெறும் 4 நாட்களிலேயே ஜெயிலர், Gadar 2 போன்ற படங்களின் மொத்த வசூலை (650+) முறியடித்தது `துரந்தர் 2'. ரூ.750 கோடி 4 நாட்களில் உலகளவில் வசூலித்தது.
இப்போது வெறும் 11 நாட்களிலேயே ரூபாய் 1,365 கோடி வசூலித்து துரந்தர் முதல் பாகத்தின் வாழ்நாள் (50 நாள்) வசூலை முறியடித்துள்ளது `துரந்தர் தி ரிவென்ஞ்'. அதிகளவு வசூல் செய்த இந்தியப் படங்கள் என்ற பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்த துரந்தர் முதல் பாகம் (1307.35 கோடி) இப்போது ஆறாவது இடத்திற்குச் சென்றுள்ளது.
நான்காம் இடத்தில் `KGF 2' (1215 கோடி), மூன்றாம் இடத்தில் `Pushpa 2' (1742.10 கோடி), இரண்டாம் இடத்தில் `Baahubali 2' (1788.06 கோடி) மற்றும் முதல் இடத்தில் `Dangal' (2070 கோடி) இருக்கிறது. கண்டிப்பாக, ஆமீர்கானின் Dangal பட வசூலை முறியடித்து அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் முதலிடத்தை `துரந்தர் தி ரிவென்ஞ்' பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.