Dhanush Tere Ishk Mein
பாலிவுட் செய்திகள்

"உங்களுக்கு காதல் தோல்வி முகம் இருக்கிறது!" - தனுஷ் பகிர்ந்த சம்பவம் | Dhanush | Tere Ishk Mein

‘ராஞ்சனா’ வாக இருக்கட்டும், இந்தப் படமாக இருக்கட்டும் எல்லாம் சவாலான வேடங்கள். ‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி கிடையாது.

Johnson

தனுஷ், க்ரித்தி சனோன் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள படம் `தேரி இஷக் மெய்ன்'. இப்படம் நவமபர் 28ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் தனுஷ் ஒரு கேள்விக்கு அளித்த பதில் வைரலாகி இருக்கிறது.

இந்த நிகழ்வில் " ‘ராஞ்சனா’, `தேரி இஷக் மெய்ன்' என காதல் தோல்வியில் கோபமாக இருக்கும் நபராகவே நடிக்கிறீர்களே. இது போன்ற பாத்திரங்கள் தான் உங்களுக்கு பிடிக்கிறதா?" எனக் கேட்கப்பட, அதற்கு பதிலளித்த தனுஷ், "ஆனந்த் இப்படியான பாத்திரங்களுக்கு தான் என்னை அழைக்கிறார். நான் அவரிடம் ‘ஏன் என்னை இப்படியான காதல் தோல்வியைச் சந்திக்கும் கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்கிறீர்கள்’ எனக் கேட்டேன். அவர் ‘உங்களுக்கு சிறப்பான லவ் ஃபெயிலியர் முகம் இருக்கிறது’ என்றார். அன்று நான் என் முகத்தை கண்ணாடியில் பார்த்து, அப்படித்தான் இருக்கிறதா என யோசித்தேன். ஆனால் இயக்குநர் சொன்னதை நான் பாராட்டாக எடுத்துக்கொண்டேன். அப்படியான கதாபாத்திரங்களில் நடிப்பது சவாலான விஷயம்.

‘ராஞ்சனா’ வாக இருக்கட்டும், இந்தப் படமாக இருக்கட்டும் எல்லாம் சவாலான வேடங்கள். ‘ராஞ்சனா’ படத்தில் அது சாதாரணமான கதாபாத்திரமாகத் தெரியலாம். ஆனால், அப்படி கிடையாது. அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது மிக சிக்கலானது. கொஞ்சம் தவறினாலும் உங்களுக்கு குந்தன் கதாபாத்திரம் பிடிக்காமல் போய்விடும். எனவே அதற்கான முன்னெச்சரிக்கைகள், பயிற்சி எல்லாம் எடுத்துக் கொண்டேன். அதுபோல, இப்படத்தின் ஷங்கர் பாத்திரம் எளிதில் எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அதிலும் நிறைய  சவால்கள் இருந்தன. அவற்றை பற்றி இப்போது சொல்லமுடியாது. படம் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் பற்றி உங்களுக்கு தெரியவரும். ஒரு நடிகருக்கு இப்படியான சவாலான வேடங்கள் வரும் போது உற்சாகமாக அதில் இறங்குவார்கள். வெறுமனே வசனத்தை மனப்பாடம் செய்து, கேமரா முன்னாள் பேசிவிட்டு வராமல், அதெற்கென மெனக்கெடல் எடுத்துக் கொள்வேன். இப்படியான கதைகள் அடிக்கடி வராது" என்றார்.