அமீர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கி 2025ல் வெளியான படம் `Sitaare Zameen Par'. 2018ல் வெளியான ஸ்பானிஷ் மொழிப்படமான `Champions' படத்தின் இந்தி ரீமேக்காக உருவானது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய வழக்கில் கைதாகும் கூடைப்பந்து பயிற்சியாளர் அமீர்கானுக்கு, intellectually challenged கூடைப்பந்து குழு ஒன்றுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களே கதை.
இப்படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது, திரையரங்கில் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படம் வெளியாகும் முன்னர், இந்தப்படம் எந்த ஓடிடியிலும் வெளிப்படாது, திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என அறிவித்தார் அமீர்கான். பின்னர் படம் வெளியான இரு மாதங்களுக்கு பிறகு அமீர்கான் புரொடக்ஷன்ஸ் யூட்யூப் சேனலில், ஒருமுறை இப்படத்தை பார்க்க 100 ரூபாய் செலுத்த வேண்டும் என்ற pay-per-view முறையில் இப்படத்தை வெளியிட்டார். இப்போது கிட்டத்தட்ட திரையரங்க வெளியீட்டுக்கு பின் ஒரு வருடம் கழித்து இப்படம் ஒருவழியாக ஓடிடிக்கு வருகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ளது `Sitaare Zameen Par'. எனவே தற்போது தன்னுடைய யூட்யூப் சேனலில் இருந்து படத்தை நீக்கிவிட்டார் அமீர்கான்.
திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு மக்களை வரவைத்து சவால் என பேசப்படும் இந்த காலத்தில் அதற்கான தீர்வாக, ஓடிடிக்கு படத்தை விற்காமல், தியேட்டரில் வெளியிட்டார் அமீர்கான். படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்து, வசூலில் சாதித்த பின், யூட்யூப் மூலமாகவும் குறைந்த தொகையில் படத்தை மக்கள் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, இப்போது ஓடிடியில் படத்தை வெளியிட்டுள்ளார். இது அமீர்கானின் சொந்த தயாரிப்பு என்பதால் இது சாத்தியமான என்றாலும், இனி வரும் காலத்தில் இந்த முறையை தயாரிப்பாளர்கள் பின்பற்றுவது தான் ஆரோக்யம் ஏன்டா பேச்சு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.