Sankranthiki Vasthunam, HIT, Subham, The Girlfriend Best 10 Telugu films of 2025
சினிமா

2025 Recap | கவனம் ஈர்த்த 10 தெலுங்குப் படங்கள்! | Sankranthiki Vasthunam | The Girlfriend

இந்தாண்டு கவனம் ஈர்த்த தெலுங்குப் படங்கள் பல. அவை என்னென்ன படங்கள், என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

Johnson

Sankranthiki Vasthunam

Sankranthiki Vasthunam

இந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய லாபகரமான படமாக அமைந்தது `Sankranthiki Vasthunam'. வெங்கடேஷ் காமெடி, அணில் ரவிப்புடி ட்ரீட்மெண்ட் என அட்டகாச என்டர்டெய்னர்.

Mad Square

Mad Square

Mad முதல் பாகம் அளவுக்கு இதில் எமோஷன் குறைவு என்றாலும், காமெடியில் பெரிய குறை ஏதும் இல்லாமல் ஈர்த்தது Mad Square. 

HIT: The Third Case

HIT: The Third Case

HIT படத்தின் முந்தைய பாகங்களில் இருந்த இன்வஸ்டிகேஷன், ஆனால் அவற்றைவிட அதீதமான வயலன்ஸ் கலந்து The Third Caseஐ  கொடுத்திருந்தார்கள். நானிக்கு மாஸ் ஏற்றிய படமாகவும் ஆடியன்ஸ் ரசித்த படமாகவும் இருந்தது இந்த HIT 3.

Single

Single

ஸ்ரீ விஷ்ணு - வெண்ணலா கிஷோர் காம்போவில் அசத்தலான காமெடி படமாக வந்தது `Single'. எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரித்து ரசிக்க பெஸ்ட் சாய்ஸ் இப்படம்.

Subham

Subham

ஒரு ஹாரர் காமெடி படத்தில் பெண் அடிமைத்தனம் பற்றி பேசிய சுவாரஸ்ய படம் சமந்தா தயாரிப்பில் உருவான `Subham'. தவறவிடக்கூடாதா படம்!

Uppu Kappurambu

Uppu Kappurambu

சமூகத்தின் பிற்போக்குத் தனங்களை பகடி செய்து வெளியான படம் கீர்த்தி சுரேஷ், சுஹாஸ் நடித்து வெளியான `Uppu Kappurambu'. ஜாலியான ஒரு பிளாக் காமெடி படம்.

Little Hearts

Little Hearts

இந்தாண்டின் சென்சேஷன் ஹிட் என்றால் அது `Little Hearts' தான். ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு வெடித்து சிரிக்க வைக்கும் அட்டகாசமான மேக்கிங். மௌலியின் காமெடி டைமிங் அத்தனையும் ப்ளாஸ்ட்.

The Girlfriend

The Girlfriend

டாக்சிக் ரிலேஷன்ஷிப் பற்றி மிக அழுத்தமாக பேசிய படம் `The Girlfriend'. ராஷ்மிகா மந்தனா எவ்வளவு சிறப்பான நடிகை என்பதையும் நிரூபித்தது படம்.

The Great Pre-Wedding Show

The Great Pre-Wedding Show

ப்ரீ வெட்டிங் சுட எடுத்த மெமரிகார்டு தொலைந்து போக அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்களே `The Great Pre-Wedding Show' கதை. இதன் ஊடாக ஒரு ரொமான்டிக் கதையும் நம்மை ஈர்க்கும்படி அமைந்துள்ளது.

Raju Weds Rambai

Raju Weds Rambai

கம்மம் - வராங்கள் பகுதியில் நடந்து நிஜ சம்பத்தை மையப்படுத்தி உருவான படம் `Raju Weds Rambai'. மிக அழுத்தமாக சமூக பிரச்சனைகளை முன்வைத்த படம் பாராட்டப்பட்டது.