avatar 3 part x page
சினிமா

பில்லியன் டாலர் வசூலை நெருங்கும் ‘அவதார் 3'.. சாதனையின் விளிம்பில் ஜேம்ஸ் கேமரூன்!

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள Avtar: Fire and Ash திரைப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேமரூனின் அவதார் திரைப்பங்களின் வரிசையில் மூன்றாவது படமான Avtar:Fire and Ash இதுவரை 600 மில்லியன் டாலரைக் கடந்துள்ளது.

PT WEB

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள Avtar: Fire and Ash திரைப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேமரூனின் அவதார் திரைப்பங்களின் வரிசையில் மூன்றாவது படமான Avtar:Fire and Ash இதுவரை 600 மில்லியன் டாலரைக் கடந்துள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள Avtar: Fire and Ash திரைப்படம் ஒரு பில்லியன் டாலர் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கேமரூனின் அவதார் திரைப்பங்களின் வரிசையில் மூன்றாவது படமான Avtar:Fire and Ash இதுவரை 600 மில்லியன் டாலரைக் கடந்துள்ளது. புத்தாண்டின் முதல் வார இறுதிக்குள் படத்தின் வசூல் ஒரு பில்லியன் டாலரைக் கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிகழ்ந்துவிட்டால் ஒரு பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் வசூலைக் குவித்த நான்கு படங்களை தொடர்ச்சியாகக் கொடுத்த ஒரே இயக்குநர் என்ற பெருமையை ஜேம்ஸ் கேமரூன் பெறுவார்.

ஜேம்ஸ் கேமரூன்

கேமரூன் இயக்கத்தில் 1997இல் வெளியான Titanic,2009இல் வெளியான Avatar,2022இல் வெளியான Avatar: The Way ofWater ஆகிய மூன்று திரைப்படங்களும் தலா 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் Avtar: Fire and Ash ஒரு பில்லியன் டாலர் வசூலைக் குவிப்பது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்படுகிறது. ஆனால் கேமரூனின் முந்தைய மூன்று படங்களைப்போல் இரண்டு பில்லியன் டாலர் வசூலை எட்டுவது கடினம் என்று திரைப்பட ஆர்வலர்கள் கூறுகின்றனர்.