தேவா - கார்த்திக் சபேஷ் தேவா - கார்த்திக் சபேஷ்
சினிமா

இப்படியெல்லாம் நடக்கவே கூடாது.. இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்!

இசையமைப்பாளர் தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம் ஏற்பட்டிருப்பது அதிகப்படியான வருத்தத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Rishan Vengai

தேனிசைத் தென்றல் தேவா குடும்பத்தில் தொடர்ச்சியான சோகங்கள். சகோதரர் சபேஷின் மரணத்திற்குப் பின், தேவா மாரடைப்பால் காலமானார். இப்போது சபேஷின் மகன் கார்த்திக் சபேஷ் உடல்நலக் குறைவால் 37 வயதில் உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் மூன்று இழப்புகள், ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தன்னுடைய இசையாலும், குரலாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களை கட்டிப்போட்டவர் தேனிசைத் தென்றல் தேவா. ரசிகர்களின் சோகம், இன்பம், இழப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என அனைத்து எமோசன்களின் அங்கமாகவும் தேவாவின் பாடல்கள் இருந்துள்ளன. இந்தசூழலில் தான் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 2 தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் தேவா காலமானார். அவருடைய இறப்புக்கு முன்னர் தான் தேவாவின் சகோதரர் சபேஷ், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.

தேவா

தம்பியின் இறப்பு குறித்து பேசியிருந்த தேவா, “கடைசி நேரத்தில் கூட, இங்கு வலிக்கிறது, அங்கு வலிக்கிறது என்று கூட சொல்லவில்லை. சொல்லாமலே சென்றுவிட்டான். இனி எந்த ஜென்மத்தில் சபேஷ் எனக்கு தம்பியாகவும், நான் அவனுக்கு அண்ணனாகவும் பிறக்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தார்.

இந்தசூழலில் சபேஷ் மரணம், தேவா மரணம் என அடுத்தடுத்து 2 பெரிய இழப்புகளை தேவாவின் குடும்பம் சந்தித்திருக்கும் நிலையில், மேலும் சோகத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் மற்றொரு சோகம் அக்குடும்பத்தில் அரங்கேறியுள்ளது. இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் காலமானதாக குடும்பத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். அவருக்கு வயது வெறும் 37 தான். உடல்நலக் குறைவால் நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானதாக கூறப்படுகிறது. வல்லவன், பட்டத்து யானை, குளிர் 100 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் கார்த்திக் சபேஷ்.

ஒரு இழப்பிலிருந்து மீள்வதே கடினமான விசயமாக இருக்கும் சூழலில், ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து 3 இழப்புகள் என்பது இப்படியெல்லாம் நடக்கவே கூடாது என்ற வேதனையை ஏற்படுத்தியுள்ளது.