oscar award x page
சினிமா

ஆஸ்கர் 2025 | சிறந்த நடிகை மைக் மேடிசன்.. 5 விருதுகளை வாரிக் குவித்த 'அனோரா' திரைப்படம்!

ஒரே மேடையில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக சினிமாவின் கவனத்தை ஈர்த்துள்ளார், இயக்குநர் ஷான் பேக்கர். 2025ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில், முக்கிய திரைப்படங்கள் அங்கீகாரத்தை வென்றுள்ளன.

PT WEB

திரைக்கலைஞர்களின் பெருங்கனவான ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் ஷான் பேக்கர் இயக்கிய அனோரா திரைப்படம், 5 பிரிவுகளில் விருதுகளைக் குவித்து கவனம் பெற்றுள்ளது. சிறந்த நடிகராக THE BRUTALIST படத்தில் நடித்த ADRIEN BRODY தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக அனோரா படத்தின் நாயகி மைக்கி மேடிசனுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஷான் பேக்கரின், அனோரா, சிறந்த திரைப்பட பிரிவிலும், I AM STILL HERE சர்வதேச திரைப்பட பிரிவிலும் விருதுகளை வென்றுள்ளன.

ஆஸ்கர் விருது

இயக்குநர் ஷான் பேக்கர், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த திரைப்படம் என ஒரே மேடையில் 4 விருதுகளை வென்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 5 விருதுகளை வென்று அனோரா முதலிடம் பிடித்துள்ளது. THE BRUTALIST திரைப்படம் 3 விருதுகளையும், WICKED, DUNE-2, EMILIA PARES ஆகிய படங்கள் தலா 2 விருதுகளையும் வென்றுள்ளன. பிரியங்கா சோப்ராவின் தயாரிப்பில் வெளியான அனுஜா குறும்படம் வெற்றி வாய்ப்பை இழந்தது.