சினிமா

“இந்த ஆண்டின் மிகப்பெரிய படம்” - ‘மாஸ்டர்’ பற்றி ஆண்ட்ரியா

“இந்த ஆண்டின் மிகப்பெரிய படம்” - ‘மாஸ்டர்’ பற்றி ஆண்ட்ரியா

webteam

விஜய்யின் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளார்.

பாடகி, நடிகை எனப் பன்முக திறமைக் கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நான்கு கட்டங்களாக நடைபெற்ற படப்படிப்பில் அவருக்கான காட்சிகள் எடுக்கப்படவே இல்லை. மாளவிகா மோகனன் உடன் விஜய் பங்கேற்கும் பாடல் காட்சி முதற்கட்டமாக சென்னையில் படமாக்கப்பட்டது. அதனை அடுத்து விஜய் சேதுபதி பங்கேற்ற சண்டைக்காட்சிகளுக்காக பிரம்மாண்ட சிறை செட் போட்டப்பட்டு அதில் படமாக்கப்பட்டதாக தெரியவந்தது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா, ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அதிசயிக்கும் திறமை கொண்ட இயக்குநருடன் 2020 ஆண்டின் மிகப்பெரிய படங்களில் ஒன்றான ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றுகிறேன். வரும் பிப்ரவரியுடன் எனக்கான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மாஸ்டர்’ வரும் மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே பிப்ரவரியுடன் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைய உள்ளன. அதனை ஆண்ட்ரியாவின் பதிவும் உறுதி செய்துள்ளது. இப்படத்தில் மேலும் சாந்தனு பாக்யராஜ், அர்ஜூன் தாஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர். முதன்முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.