allu arjun x page
சினிமா

தெலங்கானா | மூளைச்சாவு அடைந்த சிறுவனை சந்தித்த நடிகர் அல்லு அர்ஜூன்!

திரையரங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து, மூளைச்சாவு அடைந்த சிறுவனை நடிகர் அல்லு அர்ஜூன் இன்று நேரில் சந்தித்தார்.

Prakash J

கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம், தெலங்கானா அரசியலில் இன்று வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே மாநில அரசு, தெலங்கானாவில் சிறப்பு மற்றும் அதிகாலை காட்சிகள் போன்றவைக்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது. தன் மீது பதியப்பட்ட வழக்கில் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஒரு நாள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் தற்போது வெளியில் இருக்கிறார்.

இந்த நிலையில், திரையரங்கில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து, மூளைச்சாவு அடைந்த சிறுவனை நடிகர் அல்லு அர்ஜூன் இன்று நேரில் சந்தித்தார். சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஏற்கனவே இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.