Allu arjunFile image
இந்தியா
கூட்ட நெரிசலில் ரசிகை மரணித்த விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!
அல்லு அர்ஜுனை காண வந்து, கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை உயிரிழந்த வழக்கில், அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு
ஹைதராபாத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியை காணவந்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி அல்லு அர்ஜுனின் ரசிகை ஒருவர் உயிரிழந்திருந்தார். இதில், ‘கூட்ட நெரிசல் இருப்பது அறிந்தும் அங்கு அல்லு அர்ஜுன் பொறுப்பின்றி வந்தார்; அதனால் நெரிசல் அதிகமானது; அதனாலேயே அப்பெண் உயிரிழந்தார்’ என அம்மாநில காவல்துறையால் குற்றஞ்சாட்டப்பட்டது.
அல்லு அர்ஜூன்எக்ஸ் தளம்
அதன்பேரில் கடந்த டிசம்பர் 13-ம் தேதி கைது செய்யப்பட்டு நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், விசாரணைக்காக அல்லு அர்ஜூன் காணொலி வாயிலாக இன்று ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கி உத்திரவிட்டுள்ளார்.