சினிமா

28-ல் வெளியாகிறது டிஜிட்டல் அமர்க்களம்: ரசிகர்கள் குஷி

28-ல் வெளியாகிறது டிஜிட்டல் அமர்க்களம்: ரசிகர்கள் குஷி

Rasus

அஜித், ஷாலினி நடிப்பில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நாளை மறுநாள் அதாவது 28ம் தேதி வெளியாக இருக்கிறது‌.

அஜித்தின் 25-ஆவது திரைப்படமான அமர்க்களம் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில்

வெளியாக உள்ளது. மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அமர்க்களம் மீண்டும் திரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பட வெளியீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிக உற்சாகமடைந்துள்ளனர்.