பிரபல நடிகை தமன்னா, தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் எல்லைமீறி நடந்து கொண்டதாக நினைவுகூர்ந்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமானாலும், தெலுங்கு - தமிழ்த் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து, புகழ்பெற்றவர் தமன்னா. தெலுங்கில் பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களிலும், தமிழில் விஜய் - அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தாம் நடிக்கத் தொடங்கிய காலத்தில், தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் எல்லைமீறியதாக நினைவுகூர்ந்து குற்றம்சாட்டினார். இவ்வாறு தொடர்ந்து நடந்து கொண்டால், படத்தை விட்டு விலகிவிடுவதாக எச்சரித்த பிறகே, அந்த நடிகர் தனது போக்கை மாற்றிக் கொண்டதாக தமன்னா கூறியுள்ளார். அந்த தென்னிந்திய நடிகர் யார் என்பதை தமன்னா சுட்டிக்காட்டவில்லை.