மாரி செல்வராஜ் - நடிகை ஆராத்யா web
சினிமா

”அர்ப்பணிப்பான நடிகைகள் தமிழ் சினிமாவிலும் இருக்கோம்..” - மாரி செல்வராஜ் கருத்துக்கு நடிகை பதில்

அர்ப்பணிப்பான நடிகைகளை தன்னுடைய படத்தில் நடிக்கவைப்பதாக மாரி செல்வராஜ் கூறியிருந்த நிலையில், தமிழ் சினிமாவிலும் டெடிகேட்டிவான நடிகைகள் இருப்பதாக நடிகை ஆராத்யா மேடையில் பதிலளித்துள்ளார்..

Rishan Vengai

மாரி செல்வராஜ் இயக்கத்தில் பிறமொழி நடிகைகள் அதிகம் நடிப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தான் தேர்ந்தெடுக்கிறோம் என கூறினார். இதற்கு நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்பான நடிகைகள் உள்ளனர் என உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்துள்ளார், இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் போன்ற அழுத்தமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை கொடுத்து வெற்றிகரமான இயக்குநராக வலம்வருபவர் மாரி செல்வராஜ்.. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், திரைக்கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டும் வருகிறது..

மாரி செல்வராஜ்

இந்தசூழலில் மாரிசெல்வராஜ் திரைப்படங்களில் தமிழ்நடிகைகள் நடிப்பதில்லை என்றும், தமிழ் சமூகத்தின் பிரதிபலிப்பாக வெளிவரும் அவரின் படங்களில் வேற்றுமொழி நடிகைகள் ஏன் நடிக்கிறார்கள் என்ற விமர்சனமும் கேள்வியும் எழுந்தது..

Bison

மாரி செல்வராஜ் படங்களில் அதிகம் மலையாள நடிகைகள் நடிப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், அர்ப்பணிப்புள்ள நடிகைகளை தான் நாங்கள் நடிக்கவைக்கிறோம் என பேசியிருந்தார். தற்போது அந்த கருத்திற்கு ‘தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்பான நடிகைகள் இருப்பதாக’ நடிகை ஆராத்யா பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

தமிழ் நடிகைகள் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா..??

தமிழ் நடிகைகள் ஏன் தன்னுடைய படத்தில் இல்லை என்பதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “டெடிகேட்டிவ் ஆன ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன். அது மலையாளி என்றால் கூடப் பிரச்சனையில்லை. மற்ற மொழி நடிகைகள், நாங்கள் என்ன மாதிரியானக் கேரக்டர் கொடுத்தாலும், என்ன எதிர்பார்க்கிறோமோ அதை எங்களுக்குக் கொடுக்கிறார்கள். அதுபோல, நாங்கள் மனதில் வைத்திருக்கும் கேரக்டருக்குச் சிலருடைய முகங்களும் நடிப்பும் எங்களுக்குச் சரியாகப் படுகிறது. அதனால் நாங்கள் மற்ற மொழி நடிகைகளைத் தேர்ந்தெடுக்கிறோம். நாங்கள் எதிர்பார்ப்பது போலத் தமிழ் நடிகைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களையும் நாங்கள் பயன்படுத்துவோம்” என பேசியிருந்தார்..

நடிகை ஆராத்யா

இந்நிலையில் அவரின் கருத்துக்கு பதிலளித்திருக்கும் நடிகை ஆராத்யா உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.. சென்னையில் நடைபெற்ற 'மதராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் மேடையில் பேசிய நடிகை ஆராத்யா, “இங்கு பொதுவாக நடிகைகள் என்றால் 25 வயதிற்குள் தான் இருக்க வேண்டும், திருமணமாகி இருக்கக்கூடாது என்ற ஒரு பார்வை வைத்திருக்கிறார்கள்.. சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் சார் பேசியதை நாம் பார்த்திருப்போம்.. சார் சொல்லியிருக்காங்க டெடிகேடிவான ஆர்டிஸ்ட்டை தான் நான் எடுப்பேன் என்று, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் இருக்கோம் சார். எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா? தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் இருக்கோம்” என்று பேசியுள்ளார்..