ரன்யா ராவ் எக்ஸ் தளம்
சினிமா

கர்நாடகா தங்க கடத்தல் விவகாரம் | ஜாமீன் கோரி நடிகை உயர்நீதிமன்றத்தில் மனு!

கன்னட நடிகை ரன்யா ராவின் தங்க கடத்தல் வழக்கில், ஜாமீன் கோரி அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Prakash J

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால், கடந்த மார்ச் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகின. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியது. இதற்கிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கூறி, அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி அவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, அந்த மனு நடப்பு வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரன்யா ராவ்

முன்னதாக, செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, யூடியூப் சேனல்களைப் பார்த்து நடிகை தங்கம் கடத்தியதாக அரசுத் தரப்பு தெரிவித்தது. இதில் மேலும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்பதாலேயே நடிகையிடம் நீதி விசாரணை வேண்டி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த வழக்கில் நடிகையின் உதவியாளரான தருண் ராஜ் இரண்டாவது நபராகச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சாஹில் ஜெயின் என்ற வணிகர் மூலம் ரன்யா ராவ் கடத்தப்பட்ட தங்கத்தை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், இந்த வழக்கில் இதுவரை நடிகை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரன்யா ராவும், தருண் ராஜும் துபாய்க்கு குறைந்தது 26 முறை பயணம் செய்ததாகவும் நகையை கடத்தி வரும்போது பிடிபடாமல் இருக்க, நடிகை ஆடையிலும் தொடையிலும் மறைத்து வைத்ததாக விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.