கீர்த்தி சுரேஷ் முகநூல்
சினிமா

தன் நீண்டகால நண்பரை விரைவில் கரம்பிடிக்கப்போகும் நடிகை கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ், தன் நீண்டகால நண்பரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவாகப் பார்க்கலாம்.

PT WEB

“அன்பை கொடுக்கறதும் அரவணைச்சு போறதும்தான் காதல்... மனசு ஒத்துபோன ரெண்டு நண்பர்கள் சரியான புரிதலோட இருந்தாலே, வாழ்க்கைக்கு அதுவே போதும்...” - ஒரு பேட்டியில் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குடுத்த பதில்தான் இது.

அன்றே கணித்தார் கீர்த்தி என சொல்வது போல அன்று அவர் ஆத்மார்த்தமா சொன்ன ஒரு பதில், இன்று அவரின் வாழ்க்கையில் நடக்க உள்ளது. ஆம், கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் மாதம் கல்யாணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் கீர்த்தி, தன் நீண்டகால நண்பரை திருமணம் செய்யப்போவதுதான் இப்போதைய தகவல்.

அந்த நண்பரின் பெயர், ஆண்டனி தாட்டில். துபாயை தலைமையிடமாக கொண்டு, தொழிலதிபராக இருக்கும் ஆண்டனி, சொந்த ஊரான கொச்சியில தங்கும் விடுதிகளையும் நடத்தி வருவதாக தகவல். கீர்த்தியும் இவரும் பள்ளிகால தோழர்களென சொல்லப்படுகிறது.

கீர்த்தி - ஆண்டனி தாட்டில்

கிட்டத்தட்ட 15 வருடங்கள் இருவரும் நண்பர்களாக உள்ளதாக தகவல். 2008-2009 காலகட்டத்துல நெருங்கி பழங்கத் தொடங்கிய இவர்கள், தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனராம். டிசம்பர் 2ஆவது வாரம், கோவாவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், முக்கியமான குடும்ப நபர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் இதில் கலந்துகொள்வர் எனவும் தெரிகிறது. கூடுதல் தகவல்கள் கீர்த்தி தரப்பில் அதிகாரபூர்வமாக அடுத்தடுத்து வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.