எஸ்ஜே சூர்யா - தேவா pt/ insta
சினிமா

’என் வாழ்க்கையே அவருடைய இசையால் தான்..’ சோகத்துடன் பகிர்ந்த எஸ்ஜே சூர்யா!

இசையமைப்பாளர் தேவா உடன் குஷி, வாலி திரைப்படத்தில் சேர்ந்து பணியாற்றது குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இயக்குநர் எஸ்ஜே சூர்யா.

Rishan Vengai

தமிழ் சினிமாவின் தேனிசைத் தென்றல் தேவா மாரடைப்பால் காலமானார். அவரது இசையில் உருவான ‘வாலி’, ‘குஷி’ திரைப்படங்கள் எஸ்ஜே சூர்யாவின் வாழ்க்கையை மாற்றியதாக அவர் சோகத்துடன் பகிர்ந்துள்ளார். தேவாவின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என அவர் தெரிவித்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, தன்னுடைய 76 வயதில் மாரடைப்பால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

deva

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியவர். அதிலும் எஸ்ஜே சூர்யாவின் அறிமுக திரைப்படமான குஷி மற்றும் வாலி இரண்டு திரைப்படங்களுக்கும் ஆல்பம் ஹிட் பாடல்களை கொடுத்த தேவா, ஒரு இயக்குநராக எஸ்ஜே சூர்யாவின் வெற்றிக்கு பெரிய பங்காற்றினார்.

இந்தசூழலில் தான் தேவாவின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பேசிய எஸ் ஜே சூர்யா, தேவா இசையில் தான் ‘வாலி’, ‘குஷி’ என என்னுடைய வாழ்க்கையே தொடங்கியது. மிக அற்புதமான மனிதர். அவர் இன்னும் 10 வருடங்கள் இருந்திருக்கலாம். நல்ல மனிதர். யார் மனமும் கோணாமல் நடந்து கொள்ளும் மிகச்சிறந்த மனிதர்.

அவருடன் பணியாற்றிய என்னுடைய அனுபவம் மிகச் சிறப்பானது. பார்த்தால் தூங்கியபடி இருக்கிறார். மிகவும் கஷ்டமாக உள்ளது. அவர் மறைந்தாலும், அவர் இசையமைத்த பாடல்கள் என்னென்றும் நம்முடன் இருக்கும். என்னுடைய முதல் 2 படங்களுக்கு அவர் அளித்த பங்களிப்பை என்னால் மறக்கவே முடியாது. சிறந்த மனிதர், சிறந்த இசையமைப்பாளர்” என பேசியுள்ளார்.